பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இது அவரின் தனிப்பட்ட பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த அவர், கடற்கரையில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு, அதன் கட்டட கலையை கண்டு ரசித்தார். தொடர்ந்து படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார்.
அங்கு சுற்றி பார்த்து விட்டு தியான மண்டபத்தில் தியானம் செய்தார். நாளை மதியம் 3 மணி வரை விவேகானந்தர் பாறையில் இருக்கும் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளும் அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. தேர்தல் விதிமீறலில் பிரதமர் மோடி ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. இப்படியான நிலையில் இன்று காலை காவி உடையில் சூரிய நமஸ்காரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மீண்டும் தியானத்துக்கு சென்று விட்டார்.
மீம் பகிர்ந்த தமிழ் படம் இயக்குநர்
பிரதமர் மோடி தியானம் செய்வதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தியானம் செய்யும் பிரதமர் ஏன் தனியாக தியானம் செய்யாமல் ஒட்டுமொத்த கேமரா குழுவை அழைத்துச் சென்று அதை படம் பிடித்து வெளியிட வேண்டும் . இது விளம்பரத்திற்காக செய்யப் படும் யுக்தி என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்
முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் இது தியானம் மாதிரி தெரியவில்லை நாடகம் மாதிரி இருப்பதாக பதிவிட்டிருந்தார். பிரகாஷ் ராஜைத் தொடர்ந்து தற்போது மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தின் இயக்குநர் சி.எஸ் அமுதன் தனது எக்ஸ் தளத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் படம் 2 வில் சிவா தியானம் செய்யும் மீம் டெம்ப்ளேட்டை எடுத்து அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க : அடுத்த வாரம் திருமணம்... முன்பே நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி - மதுரையில் ரசிகர்கள் நெகிழ்ச்சி