நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் - பாஜக OBC அணி சூர்யா சிவா மீது புகார்.. 

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் சாட்டை துரைமுருகன் என்பவர்,   "சாட்டை" என்கிற வலையொளி (Youtube) சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ,2 ஆண் மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28.05.2024 அன்று நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவாவின் மகனும், பாஜக OBC அணி சூர்யா சிவா  என்பவர் 5 தமிழ் என்ற யூடியூப் சேனலில் சாட்டை துரைமுருகன் பற்றியும், அவரது மனைவியை பற்றியும் மிகவும் தரக்குறைவாகவும், கேவலமாகவும் அருவருக்கதக்க வகையிலும் பேசி காணொளி வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..

பாஜக  OBC அணி சூர்யா சிவா தொடர்ந்து சமூக வலைதளங்களில் என்னையும் என் குடும்பத்தை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி வருகிறார். அதை உடனடியாக கண்டித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமியிடம் இன்று புகார் மனு கொடுத்துள்ளோம். 

நான் தொடர்ந்து பாஜகவை பற்றியும், திமுகவை பற்றியும் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக சூர்யா சிவா குற்றம் சாட்டுகிறார். ஏனென்றால் மக்களுக்கு தெரியாத சில உண்மையான கருத்துக்களை பாஜக மற்றும் திமுகவை பற்றி நான் வெளிப்படையாக பேசியது அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

ஆகையால் பாஜக, திமுக இணைந்து என் மீது இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புவதாக நான் புகார் கொடுத்து உள்ளேன். 

உடனடியாக பாஜக OBC அணி சூர்யா சிவா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடும். பிறகு சூர்யா சிவா வீட்டில் சாட்டை துரைமுருகன் தாக்குதல் நடத்தினான் , அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்லக்கூடாது. தனி மனிதன் குடும்பத்தை பற்றி மிகவும் கேவலமாக ஒருவர் பேசும்போது, கட்சி கொள்கை எல்லாம் பொருட்படுத்த முடியாது என்று கூறினார்.