தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடி வாசல் படத்தில் இணைந்திருக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி தற்போது  இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. 


கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படம், ஜிவிக்கு 75வது திரைப்படம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. 


வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டானது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகியது. அதில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் எப்படி இருக்குமோ, அதேபோல் செட் அமைக்கப்பட்டு அதில் நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறனுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது. 


இந்தநிலையில், தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடிகர் சூர்யா, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு மேல், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது, இதைப்பார்த்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர். 






வாடிவாசல் திரைப்படம் குறித்து முன்னதாக ஜிவி பேசியபோது,  “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாம நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காவும் பாடல்கள் இருக்கும்.” என்று தெரிவித்திருந்தார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண