வேற்று கிரகங்களிலிருந்து பொருட்கள் நம்முடைய பூமிக்குள் நுழைந்தால் பலரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். மேலும் அறிவியல் பூர்வமாக இது பெரும் ஆர்வத்தை தூண்டும். அந்தவகையில் கடந்த 2014 ஒரு விண்கல் பூமிக்கு வந்தது.  இந்த விண்கல் தொடர்பான ஆராய்ச்சியில் அமிர் சிராஜ் மற்றும் ஆப்ரஹாம் லியோப் ஈடுபட்டு வந்தனர். 


இந்நிலையில் அவர்களின் ஆராய்ச்சியில் 2014ஆம் ஆண்டு வந்தது வேற்று கிரகத்தில் இருந்த பொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா விண்வெளித்துறை சார்பில் ஒரு ட்விட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த ஆராய்ச்சி தொடர்பாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 


 






அதன்படி, “ 2014ஆம் ஆண்டு பூமிக்கு வந்தது வேற்று கிரகத்திலிருந்து வந்த பொருள் தான் இது. இந்த பொருள் 1.5 அடி  இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு வேற்று கிரகத்திலிருந்து வந்த பொருள் உறுதி செய்யப்பட்டது. தற்போது அதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு வந்த பொருளே வேற்று கிரகத்திலிருந்து வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 


மேலும் இந்த ஆராய்ச்சியில் பூமிக்கு வரும் வேற்று கிரக பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 450 மில்லியன் பொருட்கள் இதுபோன்று பூமிக்கு வரும் என்றும் ஆராய்ச்சியில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் வேற்று கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நமக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே 2014ஆம் ஆண்டு பூமிக்கு வந்த பொருளின் துகல்களை கடலில்  தேடி ஆய்வு செய்தால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் என்று இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண