பொங்கலுக்கு வெளியாகும் படங்கள்
2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தள்ளிவைத்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விடாமுயற்சி தவிர்த்து இந்த பொங்கலுக்கு திரையரங்கில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் ஒன்றுமட்டுமே பெரிய பட்ஜெட் படம்.மற்ற படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களே
கேம் சேஞ்சர்
கார்த்திக் சுப்பராஜ் கதை , ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். ராம் சரண் , கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் பெரியளவில் தோல்வியை தழுவிய நிலையில் கேம் சேஞ்சர் படம் ஷங்கருக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
வணங்கான்
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, சாயாதேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், டாக்டர் யோகன் சாக்கோ, கவிதா கோபி, பிருந்தா சாரதி, மை பா நாராயணன், அருள்தாஸ், முனிஷ் சிவகுருநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள ரொமாண்டிக் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. யோகி பாபு, வினய் ரே, டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது
மெட்ராஸ்காரன்
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
மதகஜராஜா
இந்த பொங்கல் ரேஸில் திடீர் விருந்தாளியாக வரும் படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவான மதகஜராஜா படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது , விஷால் , சந்தானம் , வரலக்ஷ்மி , அஞ்சலி என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்
நேசிப்பாயா
விஷ்னுவர்தன் இயக்கத்தில் முரளியின் மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் நேசிப்பாயா . அதிதி ஷங்கர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் , குஷ்பு , கல்கி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.