தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு படத்தோடு மற்ற படத்தை லிங் செய்ய வேண்டும் என்பதற்காகவே இயக்குநர்கள் சில சுவாரஸ்யங்களை செய்வார்கள். அது அந்த கதாபாத்திரமாக இருக்கலாம் , அல்லது காட்சிகளாக இருக்கலாம். அப்படி தமிழ் சினிமாவில் பிரபலமான காட்சி மற்றும் கதாபாத்திரங்களின் ரெஃபரன்ஸை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா ?
இந்த காமெடிய நம்ம யாராலும் மறக்க முடியாது. வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடித்திருப்பார்கள். அந்த காமெடி ரெஃபரன்ஸை தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். மந்திரி வீட்டில் ரைடிற்காக செல்லும் பொழுது , செந்தில் அங்கிருந்த பெட்டமாஸ் லைட்டை பார்த்து கவுண்டமணி சொல்வதை நினைத்து பார்த்து அதன் இழையை ரசிக்குவது போன்ற காட்சியை மீண்டும் அமைத்திருப்பார்கள் .
சிங்க பெருமாள்
2010 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜாவுடைய அறிமுகப்படமான , ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியானது. இதில் பாலிவுட் ஸ்டார் ஜாக்கி செரீஃப் சிங்க பெருமாள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தின் இறுதியில் அவரை கொலை செய்வது போல் காட்டியிருப்பார்கள் . இதன் தொடர்ச்சியை தான் அடுத்ததாக எடுத்த சூப்பர் டீயூலக்ஸ் ஆந்தாலஜியில் இணைத்திருப்பார் இயக்குநர். திருநங்கையாக மாறிய விஜய் சேதுபதி ,தொலைந்த தனது மகனை தேடி அலையும் பொழுது , சுவர் ஒன்றில் சிங்கம் பெருமாள் நினைவஞ்சலி போஸ்டர் கிழிந்த நிலையில் இருப்பதை காணலாம்.
நினைத்தாலே இனிக்கும்!
இன்றைக்கும் இந்த படம் பலரின் ஃபேவெரைட் . கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் சக்தி மற்றும் அனுஜா ஐயர் இருவருக்குமான காதல்தான் ஹைலைட். காதலை சொல்ல வரும் சூழலில் கதாநாயகன் இறந்துவிடுவது போல காட்சியை உருவாக்கியிருப்பார் இயக்குநர். அதன் பிறகு வெளியான யுவன் , யுவதி திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள். அங்கு விட்ட காதலை மீண்டும் இந்த படத்தில் ஆரமிப்பதாக எடுத்திருப்பார்கள். அதனை உணர்த்தும் விதமாக ஹீரோ , ஹீரோயின் முதல் சந்திப்பில் அழகாய் பூக்குதே பாடல் ஒலிக்கும்.
பேக்கரி காமெடி
வடிவேலு காமெடியில் பிரபலமானதும் , சற்று சிக்கலான காமெடிதான் . அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கிய காமெடி . அதனை அர்ஜூனிடம் வடிவேலு வெளிப்படையாக பகிர, அதை ஊரெல்லாம் சொல்லிவிடுவார் அர்ஜூன். இந்த காமெடி ரெஃபரன்ஸை அதன் பிறகு வெளியான மணிகண்டா திரைப்படத்தில் பார்க்கலாம். அர்ஜூன் , ஜோதிகா, வடிவேலு காம்போவில் வெளியான இந்த திரைப்படத்தில் , ஜோதிகாவிடம் வடிவேலும் , “ ஒருத்தன் அவன் அக்காவை பற்றி சொன்ன ரகசியத்தையே பட்டி தொட்டியெல்லாம் “ என புலம்புவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
ஜி.வி.எம்
ஜி.வி.எம் படங்கங்கள் என்றாலே ரெஃபரன்ஸிற்கு பஞ்சமே இருக்காதே. காட்சிகளை அழகாக லிங் செய்து கொடுப்பார். அதிலும் படம் இருமொழிகளில் உருவாவது நிச்சயமானால் நடிகர்களை ஒரே படத்தில் பயணிக்க வைப்பார். அப்படிதான் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் தமிழ் வெர்சனில் , தெலுங்கு வெர்சன் ஹீரோ நானியும் டிரைனில் பயணிப்பது போல் உருவாக்கியிருப்பார் இயக்குநர். அதே போல விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு வெர்சனில் நடித்த சமந்தாவை , தமிழில் சிம்புவுடன் ஒரு காட்டியில் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.