தமிழ் சினிமாவில் இந்த வாரம் கிட்டதட்ட 8 படங்கள் ரிலீசாகின்றது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வருவதற்கு இரு வாரங்கள் முன்னாலேயே பெரும்பாலானோர் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க நினைப்பது வழக்கம். அப்படியான நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அடுத்த சில வாரங்களுக்கு ஜெயிலர் தாக்கமே நிலவும் என்பதால் முன்கூட்டியே அதிகமான படங்கள் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ரிலீசாகும் படங்கள் பற்றி காணலாம். 




  • டிடி ரிட்டர்ன்ஸ்




'தில்லுக்கு துட்டு’ மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானம், சுரபி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளனர்.  ஆஃப்ரோ இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் பிரேம் ஆனந்த்  இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சந்தானத்திற்கு கம்பேக் கொடுக்கும் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




  • எல்.ஜி.எம் (Let's Get Married)




கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக  எல்.ஜி.எம். (Let's Get Married) உருவாகியுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தோனி கேமியோர் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டீசர், ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




  • லவ்




நடிகர் பரத்தின் 50வது படம் என்ற சிறப்போடு வெளியாகவுள்ள ‘லவ்’ படத்தை ஆர்.பி.பாலா என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் இரண்டுமே கவனம் பெற்ற நிலையில் படம் ஜூலை 28 ஆம்  தேதி ரிலீசாகிறது. 




  • பீட்சா 3  - தி மம்மி




மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், கவிதா பாரதி, குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பீட்சா 3: தி மம்மி”. அருண்ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். ஏற்கனவே பீட்சா படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதியும், 2ம் பாகத்தில் அசோக் செல்வனும் ஹீரோவாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




  • டைனோசர்ஸ்




இயக்குநர்  சுராஜின் உதவியாளர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். போபோ சசி இசையமைத்த இப்படமும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 




  • அறமுடைத்த கொம்பு




இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜாக்சன் ராஜ், அறிமுக இயக்குநரான இயக்கியுள்ள படம் ‘அறமுடைத்த கொம்பு’.முற்றிலும் புதுமுகங்களை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளை சர்வதேச படவிழாவில் வென்றுள்ள அறமுடைத்த கொம்பு திரைப்படம் தியேட்டரில் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.