இந்தியாவை பொறுத்தவரை பிற மொழி படங்களை காட்டிலும், தமிழ் சினிமாக்கள் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். நல்ல கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கதை மறந்து குறிப்பிட்ட கதாநாயகர்கள் நடித்தாலே போதும் படம் தாறுமாறு ஹிட்டாகி விடும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுவிட்டது. 


இந்த நடிகர் ஏதேனும் ஒரு படம் நடித்தால் அந்த படம் நல்ல வசூல் பெற்றுவிடும். கதை எப்படி இருந்தால் என்ன..? என் கதாநாயகனை தியேட்டரில் பார்த்தாலேபோதும் என்ற சூழல்தான் இன்றைய தமிழ் சினிமா. ரசிகர்கள் எண்ணம்தான் இது என்றால் படத் தயாரிப்பாளர்கள் எண்ணமும் இந்த நடிகர்களை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் படம் 100 கோடி வசூல்தான். 


இன்றைய காலத்தில் படம்தான் 100 கோடி வசூல் என்றாலும், நடிகர்களின் சம்பளமும் 100 கோடிக்கு மேல் நகர்ந்துகொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் டாப் சம்பளம் வாங்கும் அந்த மூன்று நடிகர்கள் இவர்கள்தான்!


நடிகர் விஜய் : 


தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்தான். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்திற்காக நடிகர் விஜயின் சம்பளம் 118 கோடியாம். பீஸ்ட் படத்தில் நடிகர் விஜயின் சம்பளம் 105 கோடி என்றும் கூறப்படுகிறது. 


நடிகர் அஜித்குமார் : 


நடிகர் விஜய்க்கு ஜோடியாக எப்பொழுது கருதப்படுவது நடிகர் அஜித்தான். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் சம்பளம் 105 கோடி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வலிமை படத்தில் நடிகர் அஜித் 60 கோடி மட்டும் சம்பளமாக பெற்றதாகவும், அந்த படத்திற்கு பிறகு நேரடியாக 40 கோடியை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது. 


நடிகர் ரஜினிகாந்த் : 


தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதன் முதலில் 100 கோடியை சம்பளமாக பெற்றது நடிகர் ரஜினிகாந்த்தான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் இவரது சம்பளம் 105 கோடி என்றும், அந்த படம் வசூல் ரீதியாக சரியாக போகாததால் நெல்சன் இயக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 80 கோடியாக குறைத்து கொண்டாராம். 


நடிகர் கமல்ஹாசன் : 


உலக சினிமாவை கைக்குள் வைத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் தற்போது வரை 35 கோடிதானாம். இதற்கு காரணம் இவரது சமீபத்திய திரைப்படங்கள் பெரியளவில் வசூல் சாதனை படைக்காததுதான். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் சம்பளம் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


நடிகர் சூர்யா : 


டாப் 10 தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு இவரது சம்பளம் 28 கோடி. 


இவர்களுக்கு அடுத்தப்படியாக நடிகர் தனுஷ் 25 கோடி, சிவகார்த்திகேயன் 25 கோடி, விஜய் சேதுபதி - ரூ.25, சிம்பு 15 கோடி, விக்ரம் 15 கோடி பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். தமிழ் நடிகைகள் பொறுத்தவரை நடிகை நயன்தாரா மட்டும் 10 கோடி வாங்குவதாகவும், மற்ற நடிகைகள் 5 கோடி மட்டும் சம்பளமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண