தமிழ், மலையாளம், கன்னடம் எனப் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி. 2006-ஆம் ஆண்டில் மலையாளத்தில், அவுட் ஆஃப் சிலபஸ் படம் மூலம் மலையாளக் கடலில் உருவானது பார்வதி எனும் சிறு சுழல். அது இன்று அதி தீவிர புயல். சமீப ஆண்டுகால மலையாள சினிமாவை பார்வதியை தவிர்த்து யாராலும் எழுத முடியாது. வெறுமனே கவர்ச்சிக்கும், பாடலுக்கும் தான் நாயகி என்ற கதையெல்லாம் மலையாளத்தில் இல்லை. அதனை இறுகப்பற்றிக்கொண்ட ஒரு நடிகர்தான் பார்வதி. பார்வதியின் படங்களில் பெரும்பான்மை படங்களை அவரே தாங்கிச் செல்வார். மலையாளத்தில் அவர் நடித்த 'டேக் ஆப்' திரைப்படத்தின் முதுகெலும்பு பார்வதிதான். ''என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் இவரின் கதாபாத்திரம் படம் பார்த்த சில நாட்களுக்கும் பாதிப்பாய் இருக்கும்.
தமிழிலும் பூ என்ற திரைப்படத்தி நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் மரியான் திரைப்படத்திலும் தனுஷ் உடன் சிறப்பாக நடித்திருப்பார். அதன்பின்னர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வைரஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது கேரளாவை 2018ஆம் ஆண்டு புரட்டி போட்ட நிபா வைரஸ் தொடர்பான படமாக அமைந்தது.
அதன்பின்னர் அவர் வேறு சில படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பார்வதியை இப்படத்தில் நடிக்க வைக்க ஒரு அரசியல்வாதியும் மற்றும் ஒரு பிரபல இயக்குநரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க பார்வதி ஒப்புக் கொண்ட போதும் படக்குழுவினருக்கு எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இது எந்தப் படம் யார் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்பது தொடர்பான விவரம் தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதி கவிஞர் வைரமுத்துவிற்கு ஒஎன்வி விருது அளித்து தொடர்பாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதன்பின்னர் கேரள அரசு இந்த விருது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்தது. இந்தச் சூழலில் தற்போது பார்வதிக்கு தமிழ் படங்களில் நடிக்க எதிர்ப்பு வெளியாகியுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!