நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழ்த் திரையுலகினர் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


முஸ்தபா.. முஸ்தபா பாடலைப் பிடிக்காதவர் இருக்க முடியாது. இன்றுவரை ஃபேர்வல் பார்ட்டி என்றால் இளசுகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இந்தப் பாடல் தான். இந்தப் பாடலின் இறுதியின் வரும் கேண்டில் லைட் செரிமனி அவ்வளவு பிரபலம். அதே படத்தில் வரும் கல்லூரிச் சாலை பாடலுக்கும் இவர் தான் நடன அமைப்பு. அந்தப் பாடலும் மிகவும் பிரபலம்.


காதல் தேசம் தான் அவர் முதன்முதலில் நடன இயக்குநராக அறிமுகமான முதல் படம். அந்தப் படமே செம்ம ஹிட். அதற்கு முன்னதாக பிரபுதேவா, ராஜூ சுந்தரம் ஆகியோரின் நடனக்குழுவில் கூல் ஜெயந்த் பணியாற்றியுள்ளார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.


உயிரைப் பறித்த புற்றுநோய்:


அண்மையில் இவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் புற்றுநோய் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் திரையுலகினர் மத்தியில் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


பாரதிராஜா இரங்கல் ட்வீட்:


பாசத்துக்குரியவனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.


இதேபோல் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கூல் ஜெயந்த் மறைவுக்கு தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.


நடிப்பிலும் கால்பதித்த கூல் ஜெயந்த்:


கோலிவுட், பாலிவுட் சினிமாக்களில் நடன இயக்குநர்கள் நடிப்பில் தலைகாட்டுவது புதிதல்ல. அதேபோல், கூல் ஜெயந்தும் கோழி ராஜா என்ற படத்தின் மூலம் நடிப்பில் பிரவேசித்தார். அதற்கு முன் மியூசிக் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். சாக்கலேட் பேபி என்று பெயரிடப்பட்ட அந்த வீடியோவில் கூல் ஜெய்ந்த் நடித்திருந்தார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோ பாரதிராஜா, நவ்நீதா, கீதாஞ்சலி ஆகியோர் அதில் இடம் பெற்றிருந்தனர்.




அதன் பின்னர்தான் கோழி ராஜாவில் நடித்தார். அந்தப் படத்தில் தம்பி ராமையா, சோனா நாயர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.