தமிழ்நாட்டிற்கு அதீக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.
சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக துபாய் சென்றிருக்கிறார். துபாயில் நடக்கும் சா்வதேச தொழில் கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
அபுதாபி மற்றும் துபாய் நகரங்களில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள்,வா்த்தக மற்றும் தொழில் சங்க தலைவா்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க இருக்கிறார். அதன்படி, ஃபராபி பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, முகமது ஏஐ வடே, ஏஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் தலைவர் ஆசாத் மூப்பன், எமார் ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைவர்
ஹடி பத்ரி, ஹெச்.இ. ஷரஃபுதீன் ஷரஃப், ஷரஃப் குழுமத்தின் துணைத் தலைவர் ஆகிய முக்கிய தொழிலதிபர்களை சந்திக்க இருகிறார். அரேபு ஐக்கிய நாடுகளின் வணிக மற்றும் தொழில்முறை முதலீட்டாளர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைச் சந்திக்க இருக்கிறார்.
அபுதாபியில், முபதாலாவில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஏஐ குபைசி, அபுதாபி சாம்பர் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா முகமது அல் மசாரோய் ஆகியோர்களையும் முதல்வர் சந்திக்க உள்ளார்.
முதல்வரின் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதன் முறையாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்ற துபாய் சென்ற மு.க.ஸ்டாலினை துபாய் சென்ற அவரை துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களும் வரவேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்