மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.






மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. தனுஷ் மட்டுமின்றி லால், நடராஜன், யோகி பாபு மற்றும் ரஜீஷா விஜயன் என்று படத்தில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கி வெற்றியும் கடனுள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் இருந்து "பண்டாரத்தி புராணம்" என்ற பாடலை அப்படத்தில் இருந்தும் இணையத்தில் இருந்தும் நீக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்போது வழக்கு பதிவு செய்யப்ப்பது குறிப்பிடத்தக்கது. 




அதனை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் '1995ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது' என்று இப்படத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டினேன் என்று கூறினார். அதன் பிறகு படத்தில் 90களின் இறுதியியல் என்று மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


பல விமர்சனங்களை தாண்டி தற்போது கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். படத்திற்கான Pre Production பணிகள் தொடங்கியுள்ளது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.