நடிகர் அஜித்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் விடமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படங்கள் ரிலீஸ்சுக்கு தயாராகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: Actress Nalini: வாழ்க்கையில் நடந்த அற்புதம்; உயிரோட இருக்க காரணமே அவங்க தான் - நடிகை நளினி உருக்கம்!
அஜித் மகன்:
அஜித் நடிகை ஷாலினியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். ஆதிக் தனது தந்தையை போலவே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் ஆதிக் ஜூனியர் சென்னையில் எப்.சி அணியில் விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க: Cheran: தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!
இந்த நிலையில் பள்ளி அளவிலான போட்டியில் கலந்துக்கொண்ட ஆத்விக் 100 மீட்டர், 400 மீட்டர் என அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடினார். 3 தங்க மெடல்கள் வென்று ஆத்விக் போஸ் கொடுத்தார். இதனை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு கீழ் அஜித் ரசிகர்கள் அப்பாவை போலவே மகனும், புலிக்கு பிறந்தது பூனையாகும் என்றெல்லாம் ஆத்விக்கை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் கார் ரேசிங்:
அஜித் கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த 24h கார் ரேஸ் தொடரில் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தி இருந்தது. மேலும் கார் ரேஸ் சீசன் முடியும் வரை படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் தான் நடிப்பேன் என்று அஜித் தெரிவித்திருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் அஜித்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.