நடிகை நளினி


சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை நளினி.  இவருடைய அப்பா மூர்த்தி தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் என்பதாலும்,  அம்மா பிரேமாவும் ஒரு டான்ஸர் என்பதால் நளினிக்கு சினிமா வாய்ப்பு மிகவும் எளிதாகவே கிடைத்தது.


.இவருடைய முதல் படம் ஒத்தையடி பாதையிலே படம் நல்ல வரவேற்பை பெற்றதால்,  இந்தப் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் நடித்தார். இதில், ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பிறகு சினிமாவில் கால்ஷீட் கொடுக்க கூட தேதியில்லாமல் பிஸியான நடிகையாக வலம் வந்தார். வருடத்திற்கு 15க்கும் அதிகமான படங்களில் நடித்தார் நளினி. 


நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்:


அதீத தெய்வ பக்தி கொண்ட நளினி, ஓம் சக்தி, சமயபுரத்தாலே சாட்சி போன்ற அம்மன் படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு அருணா மற்றும் அருண் இரட்டை குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து பிருந்தாலும், தற்போது ஒரே வீட்டில் பிள்ளைகளுக்காக ஒரு நண்பர்களை போல் வாழ்ந்து வருகிறார்கள்.




ஆன்மீகம்:


இந்த நிலையில் தான், தனது உயிரை காப்பாற்றியது அம்மன் தான் என்று நளினி பேசி இருக்கிறார். ஆன்மீக சங்கமம் 2025 என்ற நிகழ்ச்சியை யூடியூப் சேனல் ஒன்று நடத்தியது. அதில் கலந்து கொண்ட நளினி ஆன்மீகம் தான் ஒழுக்கம் என்று பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், சிறு வயதாக இருக்கும் போது வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் முகம், கை, கால் கழுவிய பிறகு தீர்த்தம் அருந்த சொல்வார்கள், கோயிலுக்கு சென்று வர சொல்வார்கல், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ள சொல்வார்கள். இதைதான் எல்லோரும் சொல்வார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், சினிமாவின் இடைப்பட்ட காலத்தில் ஆன்மீகத்தை தொடர முடியவில்லை, இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறேன்.


சிவாச்சாரியார் சொன்ன வார்த்தை:


என்னை கடவுள் தான் வழி நடத்துகிறார். இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறேன். என்னை சரியான பாதையில் கடவுள் வழிநடத்துகிறார் என்பதற்கு நான் மட்டும் தான் சாட்சி. ஏனென்றால் உங்கள் முன்பு நான் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டையும் நான் கடந்து வந்திருக்கிறேன். நான் 12 வயதாக இருக்கும் போது என்னுடைய உடலில் சிரங்கு, புண் அதிகமாக இருந்தது. அதைப் பார்த்த எல்லோருமே நான் உயிருடனே இருக்கமாட்டேன் என்று சொன்னார்கள். உடனே என்னை சிவாச்சாரியாரிடம் கூட்டி சென்றார்கள். அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் நான் உங்களது முன்பு நிற்கிறேன். 


ஏனென்றால், இன்று இந்தப் பெண்ணை ஒதுக்குபவர்கள் எல்லோருமே கொண்டாடுவார்கள் என்று சொன்னார்.
நான் நடிக்க ஆரம்பித்த போது எனக்கு வயது 14. எனக்கு எப்போதும் பாதுகாப்பு என்னுடைய கருமாரி அம்மன் தான். நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள். என்னுடன் இருந்து எனக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று எனக்கு வழிகாட்டுகிறாள். எனக்கு இருக்கும் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் இந்த இரண்டின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார்.