Ind vs Eng T20 : வீணான வருணின் விக்கெட் வேட்டை... இந்தியாவை ஆஃப் செய்த இங்கிலாந்து.. மூன்றாவது டி20-யில் அபார வெற்றி

Ind vs Eng : ராஜ்கோட்டில் இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் குவித்தார். வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி சார்பில் பென் டக்கெட் அரைசதம் அடித்தார்.

Continues below advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20  தொடர் நடைப்பெற்று வருகிறது, இதில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. 

Continues below advertisement

பென் டக்கெட் அரைசதம்:

அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரராக பென் டக்கெட் களமிறங்கினார். அவர் 28 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் எடுத்தார். டக்கெட் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். லிவிங்ஸ்டன் 24 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்கள் எடுத்தார். அவர் 5 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

மிரட்டிய வருண்:

இந்தியாவுக்கு வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் மீண்ட. 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகமது ஷமி நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் அவர்களால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. ஷமி 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்தார். ஆனால், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

இந்திய அணி மோசமான தொடக்கம் 

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்தார். சாம்சனை தொடர்ந்துஅபிஷேக் சர்மாவும் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.  அவர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் 5 பவுண்டரிகளை அடித்தார். திலக் வர்மாவும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களில் வெளியேறினார்.

இதையும் படிங்க: பதக்கங்களை குவித்தும் அங்கீகாரமில்லை... மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உதவுவாரா துணை முதல்வர்?

இங்கிலாந்து வெற்றி:

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.  ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். அவர் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். அக்சர் படேல் 15 ரன்கள் சேர்த்தார். அவர் 2 பவுண்டரிகளை அடித்தார். முகமது ஷாமி ஒரு சிக்சரின் உதவியுடன் 7 ரன்கள் எடுத்தார். ஆனால் இவர்களின் பங்களிப்பு இந்திய அணி வெற்றி பெற போதுமானதாக இல்லை. இறுதியில்  இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மூன்றாவது போட்டியில்  இங்கிலாந்து அணி  26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்திய அணியால் 20  ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரில் தனது வெற்றிக்ககணக்கை தொடங்கியது.  இருப்பினும் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேனான நான்காவது டி20 போட்டி வருகிற வெள்ளியன்று(31.01.25) புனேவில் நடைப்பெறவுள்ளது

Continues below advertisement