தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படுபவர் சேவாலியர் சிவாஜி கணேசன். இவர் 1952ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தார். 288 படங்கள் வரை நடித்தார். சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் விருது வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி தான். இத்தனை சிறப்பு மிக்க நடிகரான சிவாஜி கணேசன் 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருடைய 20ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவருடைய சிறப்பான பாடல்கள் சிலவற்றை கேட்போம். 


1. மலர்ந்தும் மலராத:


சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் இணைந்து நடித்த பாசமாலர் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை பி.சுஷிலா மற்றும் டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார்கள். இதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். 


"ளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமேயானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா..."


 



2. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ:


சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கை கொடுத்த தெய்வம் என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள். இப்பாடலை டிஎம்.எஸ் பாடியிருப்பார். 


""


 



3. மலரே குறிஞ்சி:


சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான டாக்டர் சிவா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். இப்பாடலை கே.ஜே.யேசுதாஸ் மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள். 


"நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்


 தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்..."


 



4. பூங்காற்று திரும்புமா:


சிவாஜி கணேசன்,ராதா நடிப்பில் வெளியான திரைப்படம்  முதல் மரியாதை. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இசைஞானி இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள். 


"அடி நீதானா
அந்தக் குயில் யார்
வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே


 நான்தானே
அந்தக் குயில் தானாக
வந்தக் குயில் ஆத்தாடி
மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான்
மறந்ததா.."


 



5. உள்ளத்தில் நல்ல உள்ளம்:


சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார்.  இதற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள். 


"மன்னவர் பணி
ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி
பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து
அருள்வாயடாசெஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா..."


 



இவை தவிர சிவாஜி நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் மேலும் பல சிறப்பான பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றை அடுக்க ஒரு நாள் போதாது. 


மேலும் படிக்க:அ..ஆ... எஸ்.ஜே.சூர்யாவின் குதூகலமான பாடல்களை கேளுங்கள் !