தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமாகி பின்பு இயக்குநராக பணிப்புரிந்து ஹீரோவாக நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தென்காசி அருகே உள்ள வாசுதேவநல்லூரில் பிறந்தவர். தற்போது இவர் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். இன்று இவர் தன்னுடைய 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் இவருடைய படங்களில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?


1. நிலவை கொண்டு வா:


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. அந்த திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இதை அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் பாடியிருப்பார்கள். தேவா இசையமைத்திருப்பார். 


"தேன் எங்கெங்கு
உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதுதான்


இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா வாமா.."


 



2. மொட்டு ஒன்று மலர்ந்திட:


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான மற்றொரு சிறப்பான திரைப்படம் குஷி. இதில் விஜய் மற்றும் ஜோதிகா சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் தேவா இசையில் ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் பாடிய சிறப்பான பாடல் இது. 


"இதழ்கள் பொய்
சொல்லும் இமைகள் மெய்
சொல்லும் தொியாதா உண்மை
தொியாதா


காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா.."


 



3. சக்கரை இனிக்கிற:


எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நியூ. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல் இது. இதை சுஜாதா மற்றும் எஸ்பிபி பாடியிருப்பார்கள். 


"கிட்ட வந்து தட்டுன்னு
கேட்காதையா தவிலு அது
கேட்டா தட்டும் விரலு சின்ன
நூலை தன்னோடு சேர்த்து
கொள்ளும் ஊசி அந்த சங்கதி
என்ன யோசி


 என்னடி பண்ணுது
சிங்காரி இப்படி நிக்கிற
ஒய்யாரி உன் இரு கண்
விழி பொல்லாது உள்ளது
எப்பவும் சொல்லாது.."


 



4. மயிலிறகே:


எஸ்.ஜே.சூர்யா மற்றும் மீரா சோப்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே ஆருயிரே. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மதுஶ்ரீ மற்றும் நரேஷ் ஐயர் பாடிய பாடல் இது. 


"உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே


தமிழா தமிழா
தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய்
அமிர்தாய் கவி ஆற்றிட
நீ வருவாய்.."


 



5. இசை வீசி...:


எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான இசை திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா தான் இசையமைத்திருப்பார். இப்பாடலை சின்மயி பாடியிருப்பார். 


"நாணம் என்ற தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாயே


ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போர்த்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் அதை கொள்ளை கொள்ள..."


 



இவை தவிர பல ஹிட் பாடல்கள் எஸ்.ஜே.சூர்யா படங்களில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 19வது ஆண்டில் யூத்: படத்தின் பாடல்கள் என்றும் யூத்... மணிசர்மாவின் மயக்கும் இசை கேளுங்க!