தருமபுாி அருகே சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி தனிமையில் இருந்து ஏமாற்றியாதாக தீக்குளித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


தருமபுாி அருகே 17 வயது சிறுமி 12ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சிறுமி, முனிராஜ் என்ற இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, முனிராஜ் தனிமையில் சந்தித்து சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.


 




 


கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி தன்னை திருமணம் செய்யுமாறு பலமுறை முனிராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் ஏதும் அளிக்காமல், தட்டி கழித்து வந்துள்ளார். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக, சிறுமியை, முனிராஜ் சந்திக்காமல், பேசாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் முனிராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணிய சிறுமி, வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்டுக்கொட்டாய் சுத்தம் செய்ய அவரது தாய் அனுப்பியுள்ளாா். பின்னர் தாய் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்க்க சென்றபோது அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அப்பொழுது தீ எரியும்போது, அலறியடித்துக் கொண்டு, அருகில் தண்ணீர் தொட்டி பக்கம் ஓடி, தண்ணீரை ஊற்றி, அணைத்துள்ளார். ஆனால் தீ உடல் முழுவதும் பரவி, சிறுமி சென்ற வழியெல்லாம் சாம்பல் கிடந்துள்ளது. இதில் படுகாயமடைந்து சிறுமி அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் வழியில் துடிதுடித்து கிடந்துள்ளார்.




 


அப்போது சிறுமியின் தாய் ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். சிறுமியும் அங்கு சென்று நீண்ட நேரம் ஆகியதால்  மாட்டுகொட்டாய் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது சிறுமி உடலில் தீக்காயங்களுடன், கருத்த மேனியுடன் அமா்ந்துள்ளாா். இதனை கண்டு அதிா்ச்சியடைந்த தாய்  சத்தம் போட அருகில் இருந்த உறவுக்காரா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் சொல்லி தருமபுாி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, அவரது மாமாவிடம், முனிராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றியதால், தற்கொலை செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் முனிராஜ், தன்னுடன் தனிமையில் இருக்கும்போது, அடிக்கடி உறவு வைத்து கொண்டாகவும் கூறி, தண்ணீர் கொடுங்கள் என கேட்டு கதறியுள்ளார். இந்நிலையில் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால், தீவிர சிகிச்சையளித்தும் சிறுமி சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தாா். இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன்பளையம் காவல் துறையினர், முனிராஜை பிடித்து விசாரணை நடத்தி, கைது செய்தனர். மேலும் ஆசை வார்த்தை கூறி காதலன் ஏமாற்றியதால், சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.









சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண