இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 1.34 லட்சம், நேற்று 1.32 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.20 லட்சமாக மீண்டும் குறைந்துள்ளது. தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் அளவு என்பதும் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.




இயக்குனராகும் முன் ரூம் பாயாக பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்! 






ஆனால் தடுப்பூசி குறித்த அச்சம் என்பது மக்களிடையே பெருமளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தடுப்பூசி போடுவதால் சிலருக்கு ஏற்படும் சில ஒவ்வாமை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் இது தடுப்பூசிகளால் ஏற்படும் இயல்பான ஒன்று தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளை மேற்கொன்டு வருகின்றனர். இதன் ஒரு முன்னெடுப்பாக பல திரைத்துறை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.   
   
இந்நிலையில் பிரபல நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இரண்டு காதாபாத்திரங்களில் தான் தோன்றும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு வரும் நன்மைகளே அதிகமென்றும், அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் மூலம் கொரோனா குறித்து பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.