தமிழ், தெலுங்கு, இந்தியில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாகேஷ் உடன் நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் அஜித்தின் ‘தீனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு, விஜயகாந்த்தை வைத்து ‘ரமணா’ என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ரமணாவை ரீமேக் செய்து அங்கும் வெற்றி பெற்றார். பின்னர், சூர்யாவுடன் கஜினி, ஏழாம் அறிவு, அமீர்கானுடன் கஜினி இந்தி ரீமேக். விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்கார், மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர், ரஜினியுடன் தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கி தென்னிந்தியாவின் டாப் இயக்குநராக வளம் வருகிறார்.
முருகதாஸ் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். கத்தி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் சிறிதே வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநர் ஆவதற்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பூச்சூடவா’. உதயசங்கர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
''சவுதி அரேபியா ஸ்டைல்ல இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கணும்” - மதுரை முத்து‛சார்... ரம்பா ஸ்வீட் சாப்பிடுது சார்...’ இன்னைக்கு அவங்க பெர்த் டேப்பா!
முருகதாஸ் ஷேர் செய்துள்ள வீடியோவில், நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். அதில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். வீடியோவின் கீழ் ‘ஸ்டோர் ரூம் மெமரிஸ்’ என்றும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநராக இருந்தபோது இந்தப் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகிக்கொண்டார். தெலுங்கு நடிகர் ராம்-ஐ வைத்து இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நடிகர் ராம் மறுத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில்தான் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.