இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. அவ்வபோது வெளிப்படையான கருத்துகளை பேசுவதாலும், துணிச்சலாக செயல்படுவதாலும் அனைவராலும் கவனிக்கப்படுகிறார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் இது குறித்து மௌனம் கலைத்த டாப்சி ” நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்கும் நிலை எப்போது வருகிறதோ , அப்போதுதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன் “ என வெளிப்படையாக பதிலளித்திருந்தார்.



 


இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்துக்கொண்ட டாப்ஸி தனது பெற்றோர் தான் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.   ” அவர்கள் இருவருக்கும்  நான் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே எனது வாழ்க்கையை கழித்து விட போகிறேன் என்ற பயமும் இருக்கிறது. நான் எப்போதும்  அவர்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை தேர்வு செய்ய மாட்டேன். அவர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதனை நான் எதிர்க்கவும் மாட்டேன் “ என கூறியுள்ளார். மேலும் ” நான் யாரை காதலித்தேனோ, யாரை டேட் செய்தேனோ அதனை வெளிப்படையாக எனது பெற்றோர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். அவர்களிடம் எப்போதும் நான் நேர்மையாகவே இருக்கிறேன். திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் இருந்தால் மட்டுமே நேரத்தையும் , சக்தியையும் செலவிட வேண்டும். அது ஒன்றும் பொழுதுபோக்கு அல்ல ,டைம் பாஸ் செய்வதில் எனக்கு விருப்பமும் இல்லை” என  தெரிவித்துள்ளார்.



டாப்ஸி தற்போது  டென்மார்க்கை  மதியாஸ் போ(mathias boe)  என்ற பேட்மிட்டன் வீரரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மதியாஸ் 2015ஆம் ஆண்டுக்கான யூரோப்பியன் கேம்ஸில் தங்கப்பதக்கமும்  2012 சம்மர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். இவர்கள் இருவருக்குமான உறவு குறித்து பலமுறை டாப்ஸி வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் வேறு துறையை சேர்ந்தவரை திருமணம் செய்வதில் தான் தீர்க்கமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். டாப்ஸியின் கடந்த பிறந்தநாளின் பொழுது அவரது காதலன் மதியாஸ் “   நீ ஒரு கிரேஸி கிரியேச்சர், நமக்கு  வயதாகிக்கொண்டே செல்கிறது குறிப்பாக உனக்கு. நான் அடிக்கும் மொக்கை ஜோக்கிற்கெல்லாம் சிரிக்கும் ஒருவர் எனக்கு கிடைப்பதற்கு நான் என்ன அதிர்ஷடம் செய்தேனோ!  உன்னை எப்போதும் இதுபோல சிரிக்க வைக்க முயற்சிப்பேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இருவரும் மாலத்தீவில் ஒன்றாக நேரம் செலவிட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்தார். இந்த  நிலையில் டாப்ஸி தனது திருமணம் குறித்து பேசியிருப்பது, பொதுவான கருத்தா அல்லது  மதியாஸ் போ மற்றும் டாப்ஸி இருவருக்கும் ப்ரேக் அப் ஆகிவிட்டதா என்ற குழப்பத்தை அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.