ஒரு விபத்து போல சினிமாவில் தனது பயணத்தை 1999ம் ஆண்டு  தொங்கியவர் நடிகர் சூர்யா. அவரின் 48வது பிறந்தநாளான இன்று சில அவரின் வாழ்க்கையின் மிக அழகான தருணத்தை பற்றின சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக. 


 



சரவணன் சூர்யாவாக அறிமுகமான அந்த தருணத்தில் ஒரு சினிமாவுக்கு தேவையான நடிப்பு, டான்ஸ் என எதை பற்றியும் முறையான பயிற்சி இல்லாதவராக அடியெடுத்து வைத்தார். பத்திரிக்கையிலும், இணையத்திலும் சரமாரியாக விமர்சனங்களால் தாக்கப்பட்டார். டான்ஸ் என்ற பெயரில் பாடல் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். இவர் எல்லாம் எங்க தாக்கு பிடிக்க போகிறார் விரைவில் காணாமல் போய்விடுவார் என வசம் பாடியது. இருப்பினும் திக்குமுக்காடி நான்கு படங்களில் நடித்துவிட்டார். ஐந்தாவது படமாக இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் கைகோர்த்தார். அவருக்கோ தமிழில் ஹீரோயினாக அறிமுக படம்.  


இவர்களுக்கு இயக்குநர் கொடுத்த முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? இரெண்டு பெரும் நல்லா பேசி ப்ரெண்ட்ஸ் ஆகிடுங்க. இது ஒரு ரொமான்டிக் மூவி அதனால் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் ரொம்ப முக்கியம்". ஜோவின் முதல் பார்வையும் முதல் சிரிப்பும் சூர்யா மனதில் மின்னல் கீற்றை எழுப்பியது. அங்கேயே ஹீரோ பிளாட் ஆகிவிட்டார். கொஞ்ச நாட்களிலேயே இருவரும் மிக நல்ல நண்பர்கள் ஆனார்கள். அவர்களின் நட்பு எப்படி காதலாக மாறியது என்பதை சூர்யாவே அழகாக விளக்கியிருந்தார். 


ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய எல்லா ரியாக்ஷனும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் ஜோ கண்களால் பேச கூடியவர். ஜோவின் நடிப்பை பார்த்து பல முறை வியந்து இருக்கேன். அவங்க மிகவும் திறமையான நடிகை என்றாலும் என்னை ரொம்ப பாராட்டுவாங்க. அவங்க பாராட்டின உடனே என்னோட கான்ஃபிடன்ஸ் லெவல் எகிறிவிடும். அப்படியே ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறையும் அன்பும் எகிறிடுச்சு. அப்படியே பத்திகவும் செஞ்சது. 


 



எங்களை பற்றி வரும் கிசுகிசுக்களை படித்து சிரித்து கொள்வோம். அவங்க ரொம்ப பிஸியா இருந்தாங்க. அதை பார்க்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தாலும் நான் கொஞ்சம் கூச்சமா உணர்ந்தேன். நான் பெரிய ஸ்டாரா ஆகிடுவேன் என அடிக்கடி ஜோ சொல்லுவாங்க. அவங்க சொன்ன படியே நானும் பெரிய ஸ்டாரா ஆனதுக்கு பிறகு பெற்றோர்களின் சம்மதம் பெற்று கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எனக்காக ஜோ கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க. பசங்க கொஞ்சம் வளர்ந்தது. அப்புறம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உடனே சம்மதம் சொன்னாங்க. அதற்கு பிறகு அவங்க நடிச்ச படங்கள் எல்லாமே வெயிட்டேஜ் அதிகம் உள்ள படங்களாக தேர்வு செஞ்சு நடிச்சாங்க. அவங்களோட கேரியர் மேல நான் ரொம்ப அக்கறை காட்டுவேன். அது என்னுடைய கடமை” என்றார். 



சரி இவங்க இரெண்டு பேருமே ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்கோடா ஆதர்ஷ தம்பதிகளா இருக்குறாங்களே அதற்கு என்ன ரகசியம் தெரியுமா. இரண்டு பேருக்கும் இடையில் ஏதாவது சண்டையோ அல்லது மனக்கசப்போ ஏற்பட்டால் இருவரும் ஒருவரை ஒருவர் பேசி காயப்படுத்திக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஒரு சில சமயங்களில் இருவரும் பல நாட்கள் பேசாமல் கூட இருந்ததுள்ளார்கள்.  ஆனால் அந்த சமயங்களில் கூட ஒருவரை ஒருவர் ரொம்ப மிஸ் பண்ணுவாங்கலாம். அந்த டெக்னிக் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு இருவருக்கும் இடையில் சண்டை என்பது வருவதே இல்லையாம். இந்த பார்முலா  மற்ற தம்பதிகளுக்கு சூர்யா - ஜோதிகா கொடுக்கும் சூப்பர் டிப்.


சூர்யா ரொம்ப அமைதியா இருந்தாலும் ரொம்ப பெரிய லவர் பாய் என்கிறார் ஜோதிகா. பல முறை ஸ்வீட் சர்ப்ரைஸ் செய்து அசத்தி இருக்காராம். ஜோதிகா ஒரு பட விழாவில் "சூர்யா ஒரு நல்ல நண்பராக இருப்பதால் தான் அவரால் ஒரு நல்ல காதலராகவும் அன்பான கணவராகவும் இருக்க முடிகிறது" என்பதை கண்கலங்கி தெரிவித்து இருந்தார். சூர்யா உண்மையிலேயே மிகவும் சப்போர்ட்டிவான ஒரு பார்ட்னர். 


எப்படி ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு பெண் துணை நிற்கிறாளோ அதே போல ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு பின்னால்  நிச்சயம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கணவர் இருப்பார். அது தான் சூர்யா - ஜோதிகாவின் அன்பை மேலும் வளப்படுத்தி அவர்களை ஒரு சூப்பர் ஜோடிகளாக நம்மை கொண்டாட வைத்துள்ளது.