RasiPalan Today July 23: 


நாள்: 23.07.2023 - ஞாயிற்றுக்கிழமை


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நிறைவு நிறைந்த நாள்.


மிதுனம்


நினைத்த காரியங்கள் கைகூடும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் ஈடேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் நிறைந்த நாள்.


கடகம்


தனச்சேர்க்கை சார்ந்த முயற்சிகள் மேம்படும். இழுபறியான பாகப்பிரிவினைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். அலுவலக பணிகளில் திறமைகள் வெளிப்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இனம்புரியாத புதிய தேடல் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.


சிம்மம்


குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். நட்புகள் மேம்படும் நாள்.


கன்னி


புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். பொருளாதாரத்தில் கவனம் வேண்டும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  உத்தியோகத்தில் ஆதரவின்மையான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் கனிவு  வேண்டும். நலம் நிறைந்த நாள்.


துலாம்


உடன்பிறந்தவர்களிடத்தில் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


விருச்சிகம்


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அலைச்சல்கள் குறையும் நாள்.


தனுசு


உறவுகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.


மகரம்


கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். துயரம் விலகும் நாள்.


கும்பம்


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சிக்கலான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் குழப்பம் உண்டாகும்.  பணி நிமிர்த்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். சலனம் நிறைந்த நாள்.


மீனம்


குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.