சூர்யா நடித்த ஜெய் பீம் படம் சமீபத்தில் வெளியானது. அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும், ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் எதிர்ப்பையும் சம்பாதித்தது. ஜெய் பீம் படத்துக்கு அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, டி.இமான் இசையமைக்கிறார். எதற்கும் துணிந்தவர் பிப்ரவரி நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இயக்குநர் பாலாவுடன் பணியாற்ற இருப்பதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்தப் படத்துக்கான பணிகள் எப்போது தொடங்கும் என சூர்யா ரசிகர்கள் காத்திருந்தனர். வாடிவாசல் படம் தொடங்க தாமதமாகும் என கூறப்படுவதால் அதற்கு முன்னதாக பாலாவின் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிகா&சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கும் இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என தற்போது கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறவர்கள் தேர்வு தற்போது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் சர்ச்சையைத் தொடர்ந்து ஞானவேல், தான் மட்டும் பொறுப்பு என்னும் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bharathiraja Speech: ‛சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை’ கலாய்த்தாரா... பாராட்டினாரா பாரதிராஜா?