ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியின் 13வது நாள் எபிசோட் இன்று. டாஸ்க் தோல்விக்கு பின், நேற்று காடர்கள் மற்றும் வேடர்கள் அணிக்கு ஒரு ஓலை வந்தது. அதில் உங்கள் வாழ்க்கையில் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்... யாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூறும் டாஸ்க் அது.
வழக்கம் போல இரு அணிகளும் தங்கள் நன்றி, மன்னிப்புகளை கண்ணீர் மல்க கூறிக்கொண்டிருந்தனர். இன்றும் அதன் தொடர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய சர்வைவர் 13வது நாள் எபிசோடு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்...
தீவுக்கு வந்த ‛மாசாய்’ ஆதிவாசிகள்!
காடர்கள் தீவில் இரு ஆதி வாசிகள் திடீரென வருகிறார்கள் .அவர்களை கண்டதும் போட்டியாளர்களுக்கு ஒரே ஆச்சர்யம். அதே போல் தான் வேடர்கள் தீவிவும். ஆப்பிரிக்காவின் பூர்வ குடிகளான ‛மாசாய்’ ஆதிவாசிகள், வேட்டை முறைகள்குறித்து போட்டியாளர்களுக்கு அவர்கள் பயிற்சியளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அம்பு, வில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். அப்போது உமாபதி, ஆதிவாசிகளை அவன்... இவன் என வழக்கமான கலாய்ப்பு பேச்சாக சித்தரித்தார். அது முகம் சுழிக்கும் விதமாக இருந்தது.
பின்னர் அவர்களின் இசை, நடனம் குறித்த பயிற்சியையும் போட்டியாளர்களுக்கு வழங்கினர். பெசன்ட் ரவி, வந்த இருவருக்கும் தமிழ் கற்றுத் தருவதாக கூறினார். நன்றி என்கிற வார்த்தைையை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ‛அக்குனா மட்டாக்கா’ என்று லயன்ஸ் கிங் படத்தில் வரும் வார்த்தையை பார்வதி பயன்படுத்தினார்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
ஆதிவாசிகள் அங்கிருந்து கிளம்பியதும், இரு தீவுகளுக்கும் ஓலை வந்தது. 1.தமிழ் பாடல் பாட வேண்டும், 2 ஒரு டான்ஸ், 3.ஒரு நடிப்பு சீன் ஒன்று தயாரிக்க வேண்டும் என கொண்டாட்டம் தொடர்பான டாஸ்க் தரப்பட்டது. ஐஸ்வர்யா பாடுவார், பார்வதி ஆடுவார் என வேடர்கள் முடிவு செய்தனர். பாடகி என்பதால் காடர்கள் அணியில் லேடி கேஸ் பாட முடிவு செய்யப்பட்டது. ‛என்ன வேணாம் நடக்கட்டும் நான்...’ பாடலுக்கு ஆட வேடர்கள் அணி தயாரானது. ரவுடி பேபி பாடலுக்கு ஆட, காடர்கள் அணி தயாரானது. காடர்கள் அணியில் விஜயலட்சுமி-உமாபதியும், வேடர்கள் அணியில் ஐஸ்வர்யா-பார்வதி-பெசன்ட் ரவி ஆகியோர் ஆட முடிவு செய்யப்பட்டது. பின்னர் பயிற்சி முடிந்து அவர்கள் அர்ஜூன் இருக்கும் களத்திற்குச் சென்றனர்.
நடுவர்களாக மாசாய்... போட்டியாளர்கள் மஜா!
களத்திற்கு போட்டியாளர்கள் வந்ததும், சில அறிவிப்புகளை அர்ஜூன் அறிவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களை மாசாய் ஆதிவாசிகளே தேர்வு செய்வார்கள் என்றார். அதுமட்டுமின்றி இதில் வெற்றி பெறுபவருக்கு இம்யூனிட்டி டாஸ்க்கில் சில சலுகைகள் கிடைக்கும் என்றார். பின்னர் அங்கு வந்த மாசாய்கள் துள்ளிக்குதித்து ஆடினர்.முதலில் காடர்கள் அணியில் லேடி கேஷ் பாட... அவருக்கு துணையாக ராம் வாயில் இசை கொடுத்தார். மற்றவர்கள் கைத்தட்டி ஆதரவு தந்தனர்.
வேடர்கள் அணியில் இருந்து ஐஸ்வர்யா ‛இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...’ பாடலை பாடினார். ஐஸ்வர்யா பாடியதும், ஆதிவாசிகள் அதை பாராட்டினர். டான்ஸ் பெர்பாமன்ஸை பொருத்தவரை அவர்கள் திட்டமிட்டபடி அரங்கேற்றினர். அதில் விஜயலட்சுமி-உமாபதி ஆடலை மாசாய் வாசிகள் புகழ்ந்தனர்.
காடர்களுக்கு இரு வெற்றி!
பின்னர் வேடர்கள் அணி குரூப் டான்ஸ் போட்டனர். அதற்கும் வாழ்த்து கிடைத்தது. பின்னர் லேடி கேஷ் வாழ்க்கையை சீனாக காடர்கள் அணி நடித்து காட்டியது. அதன்பின் வேடர்கள் அணி தங்கள் சமையலையே சீனாக மாற்றி, அங்கு சமைக்க அவர்கள் பெற்ற மோசமான அனுபவங்களை சீனாக நடித்தனர். இறுதியில் தன்னம்பிக்கை, நட்பு, ஒற்றுமை, உயர்வு, உழைப்பு இருந்தால் போதும் என ஒரு மெஜேஜ் உடன் முடித்தனர்.
சிறப்பாக பாடிய ஐஸ்வர்யாவுக்கு ஸ்டார் லேடியாக வேடர்கள் அணியின் ஐஸ்வர்யாவும், ஸ்டார் மேனாக காடர்கள் அணியின் ராம் தேர்வு செய்யப்பட்டனர். சீன் அரங்கேற்றியதில் லேடி கேஷ் கதையை நடித்த காடர்கள் அணிக்கு கிடைத்தது. அவர்களுக்கான பரிசு பின்னர் அனுப்பி வைப்பதாக அர்ஜூன் தெரிவித்தார்.
இதற்கிடையில் மூன்றாம் உலகம் தீவில் சமைக்க வழி தெரியாமல் காயத்ரியும், இந்திரஜாவும் தவிப்பதோடு இன்றைய எபிசோட் நிறைவு பெற்றது.