சர்வைவர்-கர்ணன் இது இரண்டுக்கும் என்ன சம்மந்தம்? அது ஒரு திரைப்படம், இது ஒரு ரியாலிட்டி ஷோ. இதைக் கடந்து ஒரு விசயம் அந்த இரண்டையும் இணைத்துள்ளது. அது தான், தனுஷ்-லெட்சுமி ப்ரியா கனெக்ஷன். கர்ணன் படத்தில் முக்கியமாக பேசப்பட்டது இரண்டு விசயங்கள். ஒன்று தனுஷ் வெற்றி பெறும் வாள். மற்றொன்று பொம்மை. சர்வைவருடன் கர்ணனை இணைப்பது வாள் தான். 




கர்ணனும் வாளும்!


கர்ணனின் தனுஷ் வசிக்கும் கிராமத்தில் வாள் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் வழிபாட்டிற்கு வரும். மீன் ஒன்றை துண்டாக வெட்டி வெற்றி பெறுபவருக்கு அந்த வாள் சொந்தம். அது ஓரு ஊர் வாள் என்பதால், அதற்காக நடக்கும் வழிபாடே அந்த விழாவின் சிறப்பு. யாருக்கும் ஜெயிக்காத அந்த வாளை தனுஷ் வெற்றி பெற்று தனதாக்கி, யானையின் ஊர்வலம் வருவதும், பின்னர் நடுரோட்டில் கிராமத்தாருடன் ஆட்டம் போட்டு கொண்டாடுவதும், குடும்பத்தார் எதிர்ப்பை மீறி சென்றதால் செல்ல கோபத்திற்கு ஆளாவதும், பின்னர் தன் தந்தை, தாயிடம் அந்த வாளை கொண்டு சேர்ப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் தனுஷ் அக்காவாக வருபவர், லெட்சுமி ப்ரியா. தனுஷ் வாள் வாங்கி வரும் போது அவரது தாய் கோபிப்பார். ஆனால், அவரது அக்காவான லெட்சுமி ப்ரியா தான் அவரை சமரசம் செய்து வைத்து வாளை பெற வைப்பார். இந்த இடத்தில் தனுஷ்-அவரது அப்பா-அவரது அம்மா ஆகியோரிடம் அந்த வாள் செல்லும். ஆனால் அக்காவான லெட்சுமி ப்ரியாவிடம் செல்லாது. ஆனாலும் அந்த வாளை தன் தம்பி ஜெயித்தான் என்று கொண்டாடுவார் லெட்சுமி. இது கர்ணன் கதை




சர்வைவர் வாளும்!


இந்நிலையில் தான் ஜீ தமிழ் சேனலின் சர்வைவர் நிகழ்ச்சியில் லெட்சுமி ப்ரியா பங்கேற்பாளராக சென்றார். முதல் வாரத்தில் வேடர் அணியின் லீடராக பொறுப்பேற்ற லெட்சுமி ப்ரியாவின் செயல்பாடுகள் பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த டாஸ்கில் காடர் அணியை தோற்கடித்து ‛ட்ரைப் ஐடல்’ வாள் ஒன்றை வேடர் அணி வெற்றி பெற்றது. லீடர் என்கிற முறையில் லெட்சுமி ப்ரியா அந்த வாளை பெற்றார். அந்த வாள் இருக்கும் வரை வேடர் அணியில் யாரும் எலிமினேட் ஆக முடியாது. இந்த இடத்தில் தான் கர்ணனும்-சர்வைவரும் இணைக்கப்படுகிறார்கள்.




தம்பியை போலவே அக்காவும் வாள் தூக்கி நின்னா பாரு!


‛வாள் தூக்கி நின்னான் பாரு...’ என்கிற பாடல் வரி கர்ணனில் பேசப்பட்டது. அதே போல தான் கர்ணனின் அக்கா லெட்சுமி ப்ரியாவும் வாள் பரிசு பெற்று அதை தூக்கி நிற்கும் போது, அதே பாடலை கேட்டது போல ஒரு உணர்வை பெற்றதாக பலரும் கூறுகின்றனர். கர்ணன் பெற்றது கதைக்கான வாள், லெட்சுமி பெற்றது உண்மையான வெற்றி வாள். தம்பியும், அக்காவும் போட்டி போட்டு வாள் பெற்றால் மற்றவர்கள் கதை என்ன ஆவது...! ‛வாள் தூக்கி நின்னா பாரு... வந்து டாஸ்க் செய்ய எவரும் இல்லை...’ என்று தான் அந்த பாடல் வரியை மாற்ற வேண்டும். தம்பி தனுஷ் உடன் பெற்ற பயிற்சியோ என்னவோ, அக்கா லெட்சுமி லெகுவாக வாளை பெற்றுவிட்டார். வாளின் சிறப்புகளை அவர் முன்பே அறிந்தவராயிற்றே. இப்படி தான் இணைய உலகம் கொண்டாடுகிறது. பார்க்கலாம் கர்ணனின் வெற்றியை தம்பியை போலவே அக்காவும் பெறுகிறாரா என்று!


 


கர்ணன் மற்றும் சர்வைவர் தொடர்பான செய்திகளே கீழே படிக்கலாம்!