மம்முட்டி - ஜோதிகா நடிக்கும்  ‘காதல் தி கோர்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா,  ‘36 வயதினிலே’ படம் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர்  ‘மகளிர் மட்டும்’ ‘ நாச்சியார்’ ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் இறுதியாக, சரவணன் இயக்கிய  'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் எந்தபடத்திலும் கமிட் ஆகாமல் இருந்த ஜோதிகா, மலையாளத்தில் ரசிகர்களால் சூப்பர்ஸ்டாராக பார்க்கப்படும் மம்முட்டியுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 


 






‘காதல் தி கோர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் வைத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. 


 



இந்த நிலையில் படப்பிடிப்பை காண்பதற்காக, நடிகர் சூர்யா அங்கு சென்றிருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






குடும்ப படமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப்படத்தை மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கிறது. மேத்யூஸ் புலிகன் இசையமைத்து, சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தில் ஃபிரான்சிஸ் லூயிஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.


 






முன்னதாக நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காவும், அந்தப்படத்தை தயாரித்ததற்காக ஜோதிகாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.