Sanjay Rawat: நில அபகரிப்பு வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி மும்பையில் உள்ள பணப் பரிவர்த்தனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக கடந்த ஜூலை மாதத்தில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பினை மறு சீரமைப்பு செய்வதில் நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. சுமார் ரூ.1,034 கோடி நிதி மோசடி நடந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக சிவசேனா தலைவரும் எம்பியுமாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
பின்பு மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள பணப் பரிவர்த்தனை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையை சஞ்சய் ராவத் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருந்தார்.
சஞ்சய் ராவத் ஜாமீன் தொடர்ந்து நிராகரிப்பட்டு வந்தன. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை பத்ரா சால் மறுவடிவமைப்பு தொடர்பான பணமோசடி வழக்கில், அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அவர் மீது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்தறை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது சஞ்சய் ராவத்துக்கு முறைகேட்டில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் பத்ரா சால் நில மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி மும்பையில் உள்ள பணப் பரிவர்த்தனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
CJI DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட்!