இரவின் நிழல்-அமேசான் ப்ரைம்:



நடிகர் பார்த்திபனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் இரவின் நிழல். ரோபா ஷங்கர், பார்த்திபன், வரலக்ஷமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், Non-liner shot படமாக உருவாக்கப்பட்டது. வெகு நாட்களாக ஓடிடி ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருந்த இரவின் நிழல், நவம்பர் 11 முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமாக உள்ளது. 


ரோர்ஷாக்-ஹாட்ஸ்டார்:




மலையாள மெகா ஹிட் ஸ்டார் மம்மூட்டியின் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியன Rorschach படம், நவம்பர் 11 அன்று  டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. காணமல் போன மனைவியை கண்டுபிடிக்கும் ஹீரோவை சுற்றி சுழலும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் நல்ல சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தை பார்க்க நினைத்தால் இதைப் பாருங்கள்.


குருசிஷ்யரு-ஜீ 5:


சமீப காலமாக நல்ல நல்ல படங்களாக கொடுத்து வரும் கன்னட திரையுலக பட வரிசையில் குருசிஷ்யருவும் ஒன்று. விளையாட்டை கோ-கோ எனும் விளையாட்டை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சிரிப்பரதற்கென்று காமெடி அம்சங்களும் நிறையவே உள்ளன. குருசிஷ்யரு படம், ஜீ 5 தளத்தில் வரும் 11-ந்தேதி வெளியாகிறது. 


மெய் ஹம் மூசா-ஜீ 5:


பாகிஸ்தாள் சிறையில் 15 வருடங்களை கழித்த இந்திய ராணுவ வீரர் சொந்த ஊருக்கு திரும்பியவுடன் சந்திக்கும் பிரச்சனைகளை கூறிய படம் மெய் ஹம் மூசா. பிரபல நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாப்பாத்திரத்தில நடித்த இத்திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம், ஜீ 5 தளத்தில் வரும் 11-ஆம் தேதி வெளியாகிறது. 


பேட்டைக் காளி-ஆஹா:


‘ஆடுகளம்’ கிஷோரின் நடிப்பில் பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள மினி தொடர் பேட்டைக் காளி. வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடர், தமிழர்களின் வீர அடையாளமாக  கருதும் ஜல்லிக்கட்டையும், வாடிவாசலையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நவம்பர் 11-ஆம் தேதியன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணனின் தெரிக்க விடும் இசையில் உருவாகியுள்ள இந்த மினி சீரிஸை காண்பதற்காக பலர் ஆர்வமுடன் உள்ளனர். 


டானவ்-சோனி லைவ்:


ஹிந்தியில், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது டானவ் என்ற தொடர். 12 எபிசோடுகளை உடைய இத்தொடரில், அர்பாஸ் கான், தானிஷ் ஹீசைன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். டானவ் தொடர், வரும் 11-ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.


பத்தொன்பதாம் நூட்டாண்டு-ப்ரைம்:


19ஆம் நூற்றாண்டு கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மலையாள படம், பாத்தொன்பதாம் நூட்டாண்டு. அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும அநீதியையும், அதற்காக போராடும் நாயகனை சுற்றியும் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிரபல மலையாள நடிகர்களான சிஜூ வில்சன், அனூப் மேனன், தீப்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், அமேசான் ப்ரைமில் இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகிறது.


ப்ரீத் இன்டு தி ஷேடோஸ்-ப்ரைம்:




அபிஷேக் பச்சன், நித்யா மேனன், அமித் சாத் உள்ளிட்ட பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், ப்ரீத் இன்டு தி ஷேடோஸ். கடந்த 2020ஆம் ஆண்டில் இத்தொடரின் முதல் சீசன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் நாயகனின் போராட்டமே, ப்ரீத் இன்டு தி ஷேடோஸ். இதன் 2-ஆவது சீசன் வரும் 11-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.


முக்பீர்-தி ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை-ஜீ 5:


உண்மையான உளவாளியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் முக்பீர்-தி ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை. ஹிந்தி மொழியல் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில், நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். பாகிஸ்தானிற்கு செல்லும் இந்திய உளவாளியின் கதைதான், இந்த தொடர். இது,ஜீ 5 தளத்தில் வரும் 11-ஆம் தேதி வெளியாகிறது.


மோனிகா ஓ மை டார்லிங்-நெட்ஃப்ளிக்ஸ்:




பிரபல ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ், உமா குரைஷி, ராதிகா ஆப்தே ஆகியோரின் நடிப்பில் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள படம் மோனிகா ஓ மை டார்லிங். இப்படம், திரையரங்குகள் எதிலும் வெளியிடப்படாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திள் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. 


ஃபாலிங் ஃபார் க்ரிஸ்மஸ்-நெட்ஃப்ளிக்ஸ்:


கிருஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் ஒரு விபத்தில் அம்னீஷியா என்னும் மறதி நோயை சந்திக்கும் நாயகி குறித்த் கதைதான் பாலிங் ஃபார் க்ரிஸ்மஸ். ஜெஃப் பெனோட் இயக்கியுள்ள இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்திள் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. 


லாஸ்ட் புல்லட்2-நெட்ஃப்ளிக்ஸ்:


சாதாரண மெக்கானிக்காக இருக்கும் நாயகன் தன் மீது சுமத்தப்பட்ட வீண் பழியை துடைப்பதற்காக போராடும் கதைதான் லாஸ்ட் புல்லட். இப்படத்தின் இரண்டாம் பாகம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இம்மாதம் 11 அன்று வெளியாகிறது. முதல் பாகத்தில், தனது அன்புக்குரியோரை கரப்டட் காவல் அதிகாரிகளால் இழந்த இளைஞன், அவர்களை பழி தீர்க்கும் கதையாக லாஸ்ட் புல்லட் 2 உருவாகியுள்ளது.


வேர் த க்ராடேட்ஸ் சிங் (Where the Crawdads sing)-நெட்ஃப்ளிக்ஸ்:


மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகி கடந்த ஜூலை மாதம் வெளியான படம், Where the Crawdads sing. சோனி பிக்சர்ஸ்  தயாரிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை, பிரபல இயக்குனர் நியூமேன் இயக்கியுள்ளார்.


டோன்ட் லீவ்-நெட்ஃப்ளிக்ஸ்:


ஹாலிவுட் படங்களின் ஃபீல் குட் காதல் பட வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் டோன்ட் லீவ். சின்ன சண்டையினால் பிரியும் காதல் ஜோடிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், வரும் 11ஆம் தேதி வெளியாகிறது.