‘வாடிவாசல்’படத்தின் டெஸ்ட் ஷூட் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் முதன்முறையாக வெற்றி மாறனும், சூர்யாவும் இணைந்திருக்கும் படம் ‘வாடிவாசல்’. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னமே வெளியிடப்பட்டிருந்தது.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட்டானது இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.