தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்னப்பா நேஷனல் கிரஷ்க்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். படம் நடிப்பதை தாண்டி நமக்கு எதுக்கு மேடம் இந்த சமூக கருத்து என்றும் வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்க என்றும் கூறுகின்றனர். அப்படி என்னதான் அவர் கூறிவிட்டார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இடையில் நின்ற திருமணம்
கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஜோடியாக நடித்த ரக்சித் ஜெட்டியை திருமணம் செய்வதாக செய்திகளும் வெளியாகின. பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று பிறகு நடக்க இருந்த திருமணத்தை ராஷ்மிகா நிறுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா போன்ற படத்தின் வெற்றியால் புகழ் பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும் அவரே.
நான் தான் முதல் நடிகை
திரையுலகில் புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ராஷ்மிகா அண்மையில் அளித்த பேட்டியில் தனது சினிமா மற்றும் வாழ்க்கை பற்றி கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. அப்போது, சினிமாவுக்குள் வருவது தனக்கு எளிதான ஒன்றாக இல்லை. கொடுவா என அழைக்கப்படும் கூர்க் சமூகத்தில் இருந்து யாருமே இதுவரை சினிமாவுக்குள் வந்தது இல்லை. அந்த சமூகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான் என்று நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
90களில் தென்னிந்திய நடிகைகள்
கூர்க் சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குல்ஷன் தேவையா, நிதி சுப்பையா உள்ளிட்ட சிலர் கொடவா சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.