உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் என்ட்ரி தந்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் இருவர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து கன்னடம், மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். தனது நடிப்பு மற்றும் திறமையால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஐஸ்வர்யா ராய் படங்கள் என்றாலே பாலிவுட்டில் தனி இடம் உண்டு. இவர், தமிழில் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன், ராவணன் பொன்னியின் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

Continues below advertisement

பாராட்டை பெற்ற நடிகை

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் முதன் முதலில் அறிமுகம் ஆனார் ஐஸ்வர்யா ராய். இதனால், மணிரத்னத்தை குரு ஸ்தானத்தில் வைத்து மதித்து போற்றி வருகிறார். அவர் கூப்பிட்டால் எந்த காரணமும், கதையும் கேட்க மாட்டேன். அவர் எனக்கு எப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை உருவாக்குவார் என்பது நன்கு அறிந்தவள். அவரை பெரிதும் மதிக்கிறேன் என தெரிவித்தார். ஆனால், குருவை மிஞ்சிய சிஷ்யை என்றே பாராட்டை பெற்றவர் ஐஸ்வர்யா ராய். அவரது நடிப்பும், அழகும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவரும். 

திருமணம்

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய், கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். அவருக்கு வயது 13 ஆகிறது. அவ்வப்போது ஆராத்யா செய்யும் குறும்புகள் செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் ஆராத்யாவின் உடல்நிலை குறித்தும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு அபிஷேக் பச்சன் தக்க பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

என் மனைவி தான் காரணம்

அவ்வப்போது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்தி செய்திகள் வெளியாவது உண்டு. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் குடும்ப விழாக்களில் பங்கேற்பது போன்ற புகைப்படம் வெளியாகி வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைப்பர். இந்நிலையில், நடிகர் அபிஷேக் பச்சன் தனது மகள் ஆராத்யா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், என் மகள் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. அவர் எப்போதும் தொலைபேசியில் மூழ்கி கிடப்பது கிடையாது. இதற்கு காரணம் எனது மனைவிதான். இந்த பெருமையெல்லாம் அவரையே சேரும். ஆராத்யா எங்க குடும்பத்தின் பெருமை. அவரை சிறப்பாக வளர்ப்பதில் என் மனைவி அதிக அன்பு கொண்டுள்ளார் என தெரிவித்தார்.