சூர்யா  நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, வெற்றி மாறன், பாலா ஆகியோரது படங்களில் சூர்யா நடித்து வருகிறார். இந்நிலையில், சூரரைப்போற்று படத்தில் வெற்றி கண்ட சூர்யா - ஜிவி பிரகாஷ் குமார் - சுதா கொங்குரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளது. 


இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திற்கு பிறகு,  இயக்குனர் சுதா கொங்கராவுடனும் நடிகர் சூர்யா மீண்டும் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், இரண்டு திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரிக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், பாலிவுட் வட்டாரம் உறுதி செய்துவிட்டது.


பொதுவாக ரீமேக் படங்களில் சில மாற்றங்கள் செய்வது வழக்கம். அக்‌ஷய் குமார், அதிரடி சப்ஜெக்டில் நடித்து பழக்கப்பட்டவர். இதனால், சூரரைப்போற்று ரீமேக்கில் என்ன மாற்றங்கள் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுதா, “படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழைவிட ஹிந்தியில் நேரம் குறைவாக இருக்கும். மற்றபடி எனக்கு எந்த பெரிய வித்தியாசமும் இருக்கப்போவதாக தெரியவில்லை. ஹிந்தியில் ஐட்டம் சாங், காட்சிகள் என கூடுதலாக எதையும் சேர்க்கப்போவதும் இல்லை” என தெரிவித்திருந்தார்.


இப்படத்தை முடித்துவிட்டு தமிழில் அவர் இயக்க இருக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. சூரரைப்போற்று போலவே இன்னொரு ஹிட் படமாக இது அமையும் எனவும், இம்முறை இப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் எனவும் சூர்யா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண