கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , கருணாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது


கங்குவா இசை வெளியீடு


சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் கங்குவா. கிட்ட 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை பான் இந்திய அளவில் கொண்டு சேர்க்க படக்குழுவினர் முழு வீச்சுடன் ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ், இந்தி , கன்னடம் , மலையாளம், தெலுங்கு , ஆங்கிலம் , ஃபிரெஞ்சு , ஸ்பேனிஷ் என மொத்தம் 6 மொழிகளில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் குரல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இருக்கிறது. வட மாநிலங்களில் மட்டும் 3500 ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாக இருக்கிறது. 3 மொழிகளில் இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 






கங்குவா படத்தின் இசை வெளியீடு சென்னையில் இருந்து தொடங்க இருக்கிறது. இதுகுறித்த தகவலை தற்போது பட. தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. 


அடுத்தடுத்து மும்பை மற்றும் ஹைதராபாதில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. கங்குவா தெலுங்கு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.