சூர்யா 45
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சூர்யா 45 படத்தின் கதை
ரேடியோவில் தனது கரியரை ஆர் ஜேவாக தொடங்கி காமெடி நடிகர் , பின் நாயகன் என தற்போது இயக்குநராக வலம் வருகிறார்.ஆர் ஜே பாலாஜி . இதற்கு முன்பாக அவர் இயக்கிய எல்.கே.ஜி படம் பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஆர்ஜே பாலாஜியை ஒரு தேர்ந்த இயக்குநராக அடையாளம் காட்டியது. மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருப்பதாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த படத்தை சுந்தர் சி இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. பின் சூர்யா படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கும் தகவல் வெளியானது.
மூக்குத்தி அம்மன் ஸ்டைலில் ஆர் ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்கிற படத்திற்கான திரைக்கதை எழுதி முடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பின் இதே கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யா நடிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 45 படத்தின் அறிவிப்பு போஸ்டரும் அதற்கேற்றபடியே இருப்பதும் ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
சூர்யா நடிப்பில் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Vettaiyan 2 : வேட்டையன் 2 கதை இதுதான்....அதிரடி அப்டேட் கொடுத்த இயக்குநர் ஞானவேல்