வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மற்றும் மற்றும் விமர்ச்கர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது வேட்டையன். வழக்கமாக ரஜினி படத்திற்கு முதல் நாளில் இருக்கு கூட்டம் வேட்டையன் படத்திற்கு இல்லாதது ரசிகர்களிடம் வருத்தமேற்படுத்தியது . ஆனால் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்தது. கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது என்றாலும் இந்த படத்தின் கதை ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த கமர்ஷியலான கதையாக இருந்தது. ஆனால் வேட்டையன் திரைப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. போலி என்கவுண்டர்களுக்கு பின் இருக்கும் அரசியலை விவாதிக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஞானவேல்.
வேட்டையன் திரைப்படம் முதல் 4 நாட்களைல் உலகளவில் ரூ 240 கோடி வசூலித்ததாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. வேட்டையன் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வேட்டையன் இரண்டாம் பாகத்தைப் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் ஞானவேல்
வேட்டையன் 2 கதை
வேட்டையன் 2 படத்தின் கதை பற்றி பேசிய ஞானவேல் ' வேட்டையன் 2 படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. முதல் பாகத்தில் நடந்த கதைக்கு முன்கதையாக இந்த படம் இருந்தால் நன்றாக இருக்கும். அதியன் எப்படி ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார், திருடனாக இருக்கும் ஃபகத் ஃபாசில் ஏன் போலீஸூக்கு உதவி செய்கிறார் என்கிற மாதிரி இந்த கதையை கொண்டு போவதற்கான திட்டம் இருக்கிறது. " என ஞானவேல் தெரிவித்துள்ளார்
தோசா கிங்
வேட்டையன் படத்திற்கு அடுத்தபடியாக ஞானவேல் தோசா கிங் என்கிற படத்தை இயக்கவிருக்கிறார். ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கவிருப்பதாக ஞானவேல் தெரிவித்தார். விரைவில் இப்படத்தின் படக்குழுவினர் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.