‘நா ரெடி’ பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில், நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படக்குழு அப்பட பாடல் ஒன்றுக்காக தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில், யூவி கிரியேஷன்ஸ் - ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யா தற்போது முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார்.
சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா, பிரம்மாண்ட பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. ஃபேண்டஸி கதையாகத் தயாராகி வரும் கங்குவா படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகைகள் திஷா பதானி, மிருணாள் தாக்கூர் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரம்மாண்ட செட் அமைத்து அங்கு வரலாற்றுக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ படப் பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கங்குவா படப்பாடலின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நா ரெடி பாடலில் 2,000 நடனக்கலைஞர்கள் உபயோகிக்கப்பட்டிருந்ததாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கங்குவா படப்பாடல் 1500 நடனக் கலைஞர்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பாடலுக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலைக் கேட்டு விஜய் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கங்குவா படக்குழு சூர்யாவின் முகத்தையே இதுவரை காண்பிக்காமல் சஸ்பென்ஸ் கடைபிடித்து வரும் நிலையில், முன்னதாக சூர்யாவின் முகத்துடன் AI வடிவமைத்த கங்குவா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் முன்னதாக இணையத்தில் வைரலாகின.
மேலும், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு கங்குவா படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை முன்னதாகக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கங்குவா பட ஷூட்டிங் நடைபெற்றது.
கங்குவா படத்தின் ப்ரொமோ இந்த மாதம் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ப்ரொமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து கங்குவா திரைப்படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!