September Viruchigam Rasi Palan: சக்ஸஸ்! சக்ஸஸ்! விருச்சிகத்திற்கு வெற்றிகளை வாரி வழங்கப்போகும் செப்டம்பர்!

September Viruchigam Rasi Palan: செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு பலன்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  செப்டம்பர் மாதம் என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப் போகிறது என்பதை பார்க்கலாம். முதலில்  விருச்சகம் என்பது மறை பொருளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய இடம். நீங்கள் ஒரு வேலை தியானம் செய்யப் போகிறேன் என்று  ஒரு அரை மணி நேரம் தியானம் செய்தால் கூட  இறைவனை நேரில் வந்து வரம் கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட  ஒரு சக்தி உங்களிடத்தில் இயல்பாகவே இருக்கும்.

Continues below advertisement

குவியப்போகும் வாய்ப்பு:

குருவை பொறுத்தவரை ஏழாம் பாவத்திலிருந்து விலகி, ஆறாம் பாவத்தை நோக்கி பயணிக்கிறார். தொழில் ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை நீங்கள் ஒருவேளை சந்தித்து வந்திருந்தால்,  அவை அத்தனையும் உங்களுக்கு நிவர்த்தி ஆகி நல்ல வேலை கிடைக்கும்.  சிலருக்கு அரசு ஊழியம் அமையலாம்.  நீண்ட தூர பிரயாணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.  அதிலும் சிலருக்கு கடல் கடந்து போக வாய்ப்பு உண்டு. ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் விசாவுக்காக காத்திருந்தால், அது தற்போது கிடைக்க வாய்ப்பு உண்டு.

எதிர்காலம் எப்படி இருக்கும்? வாழ்க்கை தரம் எப்படி இருக்கும்? என்று  கருத்தில் கொண்டு மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு  பதினோராம் வீட்டில் சுக்கிரன் நீச்சமடைகிறது. ஏற்கனவே  பணம், சொத்து சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தனிப்பட்ட ஆசை இல்லாமல், மற்றவர்களுக்காக அந்த ஆசையை மறைத்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.  இப்படிப்பட்ட உங்களுக்கு சுக்கிர நீச்சம் 11 ஆம் பாவத்தில், அதுவும் ஏழாம் அதிபதி  வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு சிலர் பிரிந்து போக வேண்டிகூட வரலாம். 

சிறப்பாக அமையும் செப்டம்பர்:

ஏதேனும் சில காரணங்களுக்காக குடும்பத்தைப் பிரிந்து விருச்சிக ராசி அன்பர்கள் சில காலம் தனியாக இருக்க வாய்ப்புண்டு.  ஆனால், செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் 12ல் ஆட்சியாக வருவதால்  நீண்ட தூர பிராயணங்களையும் மேற்கொள்வது,  நல்ல வீட்டை புனரமைப்பது  பழைய வீட்டில் புதிய வீடு கட்டுவது  நிலம் வாங்குவது தொடர்பான நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். 

 நண்பர்களுடன் இந்த தூர பிரயாணங்களை கொண்டு மகிழ்வீர்கள்.  குடும்பத்தோடு சுப காரிய நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.  நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.  அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறினாலும், அதை பற்றி கவலைப்படாமல்  வாழ்க்கை இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு செப்டம்பர் மாதம் எளிதாக தான் அமையப்போகிறது.

வணங்க வேண்டிய தெய்வம் :  துர்க்கை அம்மன் வழிபாடு

Continues below advertisement
Sponsored Links by Taboola