Kanguva First Single : சூர்யா பிறந்தநாளுக்கு ரெடியாகும் கங்குவா அப்டேட்.. டி.எஸ்.பி கொடுத்த தகவல்

நடிகர் சூர்யா பிறந்தநாளன்று கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கங்குவா

நடிகர் சூர்யா வரும் ஜூலை 23-ஆம் தேதி தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.

Continues below advertisement

அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் , சுதா கொங்காரா இயக்க இருக்கும் புறநாநூறு ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். சூர்யாவின் பிறந்தநாளை அவர் நடித்துள்ள படங்களின் பல் அப்டேட்கள் வெளியாக இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்

கங்குவா பட முதல் பாடல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சரித்திர கதையாக உருவாகி இருக்கும் படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் சூர்யா மற்றும் திஷா பதானி இசையிலான காதல் பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யா 44 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யாவின் 44 -வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சூர்யா - பூஜா ஹெக்டேவின் காம்போவில் இரண்டு பாடல்கள் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளுடன் சேர்த்து சில ஆக்ஷன் காட்சிகளும் அங்கே படமாக்கபட்டுள்ளன. சூர்யா 44 ஒரு அதிரடியன ஆக்ஷன் திரைப்படம் என்பதால் ஃபைட் சீக்வன்ஸ்களை ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ மேற்கொண்டுள்ளார்.

எனவே மக்கள் விரும்பும் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளை இப்படத்தில் எதிர்பார்க்கலாம். ஃபைட் மாஸ்டரே சூர்யாவின் ஒத்துழைப்பை பார்த்து அசந்து விட்டார் என கூறப்படுகிறது. வரும் ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின்  பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க முடிவெடுத்துள்ளது படக்குழு. அதன்படி 'சூர்யா 44 ' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜூலை 23-ம் தேதி வெளியிட உள்ளது படக்குழு. அதே சமயம் 'கங்குவா' படத்தின் மேக்கிங் வீடியோவும் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola