மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் பணி செய்த கள்ளக்குறிச்சி காவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் 34 வயதான திருநாவுக்கரசு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மனைவி குழந்தைகள் சொந்த ஊரில் உள்ள நிலையில் திருநாவுக்கரசு போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
CUET : தொடரும் சர்ச்சைகள்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூலை 19 க்யூட் மறுதேர்வு- என்டிஏ அறிவிப்பு
சிறுமிக்கு மது கொடுத்த காவலர்
இந்நிலையில் போலீஸ் குடியிருப்பு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இவருக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர் மகளான 16 வயதான சிறுமியிடமும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அவரிடம் பேசி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஜுலை 8-ம் தேதி சிறுமியிடம் நைசாக பேசி அவரை காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று அவருக்கு மதுவினை கொடுத்து, மதுபோதையில் இருந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவலர் போஸ்கோ வழக்கில் கைது
இதுகுறித்து 1098 சைல்டு ஹெல்ப்லைனுக்கு வந்த புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் என்பவர் பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போஸ்கோ) வழக்குப்பதிந்து திருநாவுக்கரசை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.