மும்பையில் தனது குழந்தைகளை வீடியோ எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை சூர்யா தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, ஜோதிகாவை மும்பையில் பார்த்த பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க நிற்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சூர்யாவும் ஜோதிகாவும் நின்றனர். அப்போது அங்கு சூர்யாவின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் வந்தனர். அப்போது சூர்யா அவர்களை போட்டோ எடுக்க வேண்டாம் என்று கேமராவை மறைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா ஜோதிகா ஆகிய இருவரும் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். முன்னதாக இந்த நிறுவனத்தின் கீழ், ஜெய் பீம், சூரரைப்போற்று, உடன்பிறப்பே உள்ளிட்ட பல படங்களை தயாரித்தனர். இதில் சூரரைப்போற்று படமான இந்தியில் ரீமேக் ஆகிறது.
இதில் நடிகர் அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் சுதாகொங்கரா இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சார்ந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். முன்னதாக தமிழில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் மற்றும் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப்படத்தில் இருந்து, முன்னதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றில் வெற்றிமாறன், காளை ஒன்றுடன் சூர்யா பழக வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கெனவே நடைபெற்றது. படத்தின் நடிக்கும் இரண்டு காளைகளை சூர்யா அருகில் வைத்து கவனித்து வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று வாடிவாசல் படத்தில் இருந்து இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.