இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் டொவினோ தாமஸின் மின்னல் முரளி உள்ளிட்ட படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்திய திரைப்பட விழா மெல்போர்னில் வருகிற ஆகஸ்ட் 12 தொடங்கி ஆகஸ்ட் 20 தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 23 மொழிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னல் முரளி ஆகிய திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவின் விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
இந்த விருதுகளுக்கு சிறந்த படத்திற்கான பிரிவில் ஜெய் பீம், மின்னல் முரளி, பக்கா உள்ளிட்ட பல்வேறு படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சிறந்த இந்திய திரைப்படத்திற்க்கான பிரிவில் வங்காள மொழியை சேர்ந்த ஒன்ஸ் அப் ஆன் எ டைம் திரைப்படமும் கன்னட மொழியை சேர்ந்த பேட்ரோ திரைப்படமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நடிகருக்கான பிரிவில் பேட்ரோ பட நடிகர் கோபால் ஹேக்டே, ஜெய்பீம் படத்தில் நடித்த சூர்யா, மின்னல் முரளி படத்தில் நடித்த டொவினோ தாமஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நடிகைக்கான பிரிவில் ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் படத்தில் நடித்த ஸ்ரீலேகா மித்ரா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சிறந்த இயக்குநர் பிரிவில் பஞ்சாபி மொழியில் வெளியான ஜகி படத்தை இயக்கிய அன்மோல் சித்து, குஜராத்தி மொழியில் வெளியான லாஸ்ட் ஃபிலிம் ஷோ படத்தின் இயக்குநர் பான் நளின், ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன