அத்தியாவசிய பொருட்கள் மீதான அதிக ஜி.எஸ்.டி. வரி மக்களுக்கு சுமையாகும் என்பது குறித்து நேற்று மக்களவையில் விவாதம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.பி., கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,’ நிர்ணயித்த வரியைவிட அதிக வரிச்சுமையை மக்கள் மீது திணிப்பது தி.மு.க. அரசுதான் என்று குற்றம்சாட்டினார். 


இந்த விவாதத்தின்போது, மக்களவையில் அமளி ஏற்பட்டது. நிதியமைச்சர் தமிழில் பேசினார். நான் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.-க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



 



 


மக்களவையில் என்னதான் நடந்தது?


மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளத்தார். அப்போது, நிதியமைச்சருக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவாத்தின்போதி நிர்மலா தமிழில் பதில் அளித்தார்.


ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும், அந்த குழுவில் இருக்கும் மாநிலங்களின் உறுப்பினர்களும் சேர்ந்துதான் எடுக்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மாநிலங்களுக்கும் ஒரு பங்கு வாக்களிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒருமித்த கருத்து அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப்படும்," என்று நிர்மலா கூறினார்.


முன்னதாக,  தி.மு.க. எம்.பி கனிமொழி உத்தர பிரதேசத சிறுமி பென்சில் விலை உயர்வு குறித்து  பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார்.


 



அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், "பென்சில் விலையில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார். ஒரு சிறுமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது,  தன் மனதில் உள்ளதை எழுதினால்,அதன் மூலம் பிரதமரை சென்றடையும் என்று அவர் நம்புகிறார். அதற்கு தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறார். 


கனிமொழி எழுப்பிய கேள்விக்கு தமிழில் பதிலளித்தார் நிர்மலா சீதாராமன்.










 


இந்தி, ஆங்கிலத்திலேயே பேசி வந்த நிர்மலா சீதாராமன், கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு, தான் தமிழிலேயே பதில் அளிக்கப் போகிறேன் என்று கூறி தமிழில் தனது பதிலை அளித்தார். 


"கடந்த 2021, நவம்பர் 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ. 5, டீசல் மீதான வரி ரூ. 10 என்ற வகையில் மோடி குறைத்தார். போலவே, இந்தாண்டு மே மாதம் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்று  விலை குறைக்கப்பட்டது. 


தமிழ்நாட்டில்  தி.மு.க. அரசு பொறுப்பெற்பதற்கு முன்பி, தனது தேர்தல் அறிக்கையில்,  ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4 குறைப்பதாக தெரிவித்தனர். மேலும்,  எல்.பி.ஜி. மானியம் ரூ.100 தருவதாக கூறினர். ஆனால், செய்யவில்லை என்று தெரிவித்தார். 


நிர்மலா சீதாரமன் பேசிக்கொண்டிருக்கும்போதே கனிமொழி கருப்புப் பணம் குறித்து கேள்வி எழுப்பியதால் நிர்மலா சீதாராமன் கோபம் அடைந்தார். 




"நீங்கள் பேசும்போது நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்," என்று கூறினார்.


தான் பேசும்போது, இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியினர் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.


அவையில், எப்படி பேசுவதென்று தெரியவில்லை என்று கூறி,  திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்  விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..