சூர்யா :


தமிழ் சினிமாவின் அசைக்க  முடியாத நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார் சூர்யா.இந்த பொறுப்பு சூர்யா கதை தேர்வுகளில் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. சூர்யா சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். குறைந்த நேர கதாபாத்திரம் என்றாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 






வணங்கான்:


சூர்யா தற்போது பாலா இயக்கத்தில்  வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 20 வருடங்களுக்கு பிறகு இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 41 வது படம் இது. பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு , படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வணங்கான் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. அதே நேரத்தில் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நாவலை தழுவி எடுக்கப்படும் வாடிவாசல் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.







சிறுத்தை சிவாவுடன் கூட்டணி :


இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற ஜூலை 23 , சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா- சூர்யா காம்போவில் உருவாக உள்ள பெயர் வைக்கப்படாத படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா பகுதியில் படமாக்கப்படவுள்ளதாம். இதற்காக ஒரு மாதம் கோவாவில் முகாமிடவுள்ளதாம் படக்குழு. படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட்  மாதம் துவங்கும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது,