மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து சீனா அணியுடனான போட்டியை 1-1 என்று டிரா செய்தது. எனினும் நியூசிலாந்து அணியிடம் 4-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 


 


அதன்பின்னர் ஸ்பெயின் அணிக்கு எதிரான க்ராஸ் ஓவர் போட்டியில் இந்திய 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் இந்திய அணி 9-12 இடங்களுக்கான போட்டியில் பங்கேற்றது. இதில் முதலில் கனடா அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 


 


இந்நிலையில் நேற்று இந்தியா-ஜப்பான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதல் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் இருந்தனர். அடுத்த இரண்டு கால்பாதி





யில் இந்திய வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 


 


இதன்காரணமாக இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தியது. அத்துடன் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 9வது இடத்தை பிடித்தது. உலக மகளிர் ஹாக்கி தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்திய அணி உலகக் கோப்பை தொடரிலும் 9வது இடத்தை பிடித்துள்ளது. 


 


கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து 8வது இடத்தை பிடித்திருந்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்க போட்டியில் தோல்வி அடைந்து 4வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண