Suriya43: சுதா கொங்கரா இயக்க உள்ள 'சூர்யா 43' படத்தில் நஸ்ரியா மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. வரலாற்று ஃபேண்டஸி உருவாகி வரும் கங்குவா படத்தில் பிசியாக சூர்யா நடித்து வருகிறார். கங்குவா படத்தின் ஷீட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதால் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசலில் நடிப்பார் என த்தெரிவிக்கப்பட்டது.


ஆனால் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமாகும் என்பதால், சுதா கொங்கரா இயக்கவுள்ள சூர்யா43 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஏற்கெனவே சுதா கொங்கராவுடன் இணைந்து சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. 


இந்த நிலையில் சுதா கொங்கராவுடன் சூர்யா இணைய உள்ளதால் மீண்டும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் புதிய படத்தில் சூர்யாவுக்கு தம்பியாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும், ஏற்கெனவே பேச்சுவார்த்தை முடிந்து கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா, துல்கர் சல்மான் என பேசி முடிந்த நிலையில் ஹீரோயின் யார் என்ற டிஸ்கஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அவரை சூர்யா 43 படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை இருந்தது. 






இந்த சூழலில் சூர்யாவின் 43 படத்தில் நஸ்ரியா மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா,  ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இடையே அவ்வப்போது நடித்து வந்த நஸ்ரியா, சென்ற ஆண்டு தெலுங்கில் நானியுடன் அண்டே சுந்தரானிக்கி படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில், தமிழில் அவர் மீண்டும் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. 


படத்தின் வில்லனாக யார் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமன்னாவின் காதலரும், பிரபல இந்தி நடிகருமான விஜய் வர்மா சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது. சுதா கொங்கராவின் இயக்கம், சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா என மெகா கூட்டணி இணைவதால் படம் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Nayanthara Skincare : காஸ்மெட்டிக் பிசினஸில் கால் தடம் பதிக்கும் நடிகை நயன்தாரா!


Red Card For Actors: நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்