சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தகவல். இந்த படம் ஒரு பான் இந்திய படமென்றும்,  தமிழ் தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இப்பட ஷூட்டிங், சென்னை மற்றும் கோவாவில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.






சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக, இப்படத்தின் பூஜையானது சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தின் பூஜை நடந்த அதே இடத்தில் நடக்கவுள்ளது என்று தகவல் வந்தது இந்த பூஜை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவிற்கு சொந்தமான இடத்தில் நடக்கவிருக்கிறது என்றும் பேசப்பட்டது. ஆனால் ராமபுரத்தில் உள்ள அகரம் ஃபவுண்டேஷனில் நேற்று நடந்து முடிந்தது.






இசையமைப்பாளர் டி.எஸ்.பி உடன் 9 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் மூலம் சூர்யா இணைகிறார். சூர்யா 42 படத்தை பற்றி மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புக்களுடன் இருக்கிறார்கள். சிங்கம் படத்தில் இருவரின் காம்போ வேற லெவலில் வர்க்-அவுட்டாகி இருக்கும். அதுபோல் சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியானால் நன்றாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.


நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியை வைத்து “சிறுத்தை” படத்தை இயக்கி வெறும் சிவா சிறுத்தை சிவாவாக மாறினார். அப்படிப்பட்ட ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர் சிறுத்தை சிவா. அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை அள்ளியது. கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் கொஞ்சம் சுமாராகவே இருந்தது.


இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி முன்னனி நடிகையாக நடிக்கவுள்ளார் என்று பேசப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.