18 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சமீபத்தில் பிரிந்தனர். இருவரும் உடன்பட்டு உருவாக்கிக் கொண்ட இந்த பிரிவு ,அவர்களது இரு மகன்களை பாதிக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 


ஆனால், இரு மகன்களையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தனித்தனியே பாசத்துடன் பராமரித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ப்ரமோஷனுக்காக அமெரிக்க சென்ற தனுஷ், தன்னுடன் தன் மகன்களை அழைத்துச் சென்றிருந்தார். ஊர் சென்று திரும்பிய மகன்களை ஐஸ்வர்யாவும் ஆரத்தழுவி வரவேற்றார். 






இவையெல்லாம் அவர்களின் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்கள். இதற்கிடையில் தனுஷை பிரிந்த பின் ஐஸ்வர்யா ஆன்மிக வழியில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறார். பட இயக்கம் ஒருபுறம், உடல் ஃப்ட்னஸ் மறுபுறம் என ஒரே நேரத்தில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம் மகன்களுடன் நேரம் செலவழிப்பதிலும் கவனமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. 


அந்த வரிசையில் திங்கட்கிழமையான் இன்று, தனது மூத்த மகனின் பள்ளிக்குச் சென்றுள்ளார் ஐஸ்வர்யா. அங்கு பள்ளியின் முதலீட்டு விழா நடந்துள்ளது. அதில் விளையாட்டு அணியின் கேப்டனாக(அணித்தலைவன்) அவரது மூத்த மகன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். 






அதற்காக நடந்த விழாவில் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கும் அமைக்கப்படும் மேடையில் முதலிடத்தில் அவரது மூத்த மகன் ஏறி நிற்பது போன்ற போட்டோவை ஐஸ்வர்யா தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். காவி நிற கொடியை கொண்ட அந்த அணிக்கு, தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன் தான் கேப்டனாம். 


அவரது தலைமையில் தான் அந்த அணி செயல்படுமாம். இந்த போட்டோவை பதிவு செய்துள்ள ஐஸ்வர்யா, இன்றைய நாளைய தொடங்க என்ன வழி என்றுக் கூறி, தனது மகனின் கேப்டன் பொறுப்பேற்பை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். பார்க்க அச்சு அசல் தனுஷ் போலவே தோற்றமளிக்கும் அந்த சிறுவன், விளையாட்டில் கெட்டிக்காரர் என்கிறார்கள். 


மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா


இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் தனுஷூம் பங்கேற்றுள்ளார். அத்தோடு, மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாசும் இந்த போட்டோவில் தன் குடும்பத்தாருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.