எதற்கு துணிந்தவன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா , இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க , ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குபவர் இயக்குநர் பாலா.


இந்நிலையில், இயக்குநர் பாலாவின் பிறந்தநாளான இன்று நடிகர் சூர்யாவின் 41 வது திரைப்படத்தின் பெயர் வணங்கான் என வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…! என்று பதிவிட்டுள்ளார். 






நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது. 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான  'பிதாமகன்' படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் 'அவன் இவன்' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.


இந்தநிலையில், நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைகோர்க்கிறார். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சூர்யா 41 என்ற தற்காலிக பெயர் வைக்கப்பட்டது.இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த தகவல்களின்படி, சூர்யா இந்தப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த கதாபாத்திரத்திற்கான ஹோம் வொர்க்கில் சூர்யா இறங்கிவிட்டதாகவும், இந்தப்படத்திற்காக மதுரையில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண