பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் அவரது நாற்பதாவது திரைப்படத்துக்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் வருகின்ற 12 ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்குற்ற சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. 



கடந்த 7 ஜூன் 2021ல் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். அதில், ‘அன்பான ரசிகர்களுக்கு சூர்யா40 திரைப்படம் 35% படம் முடிஞ்சுருக்கு . எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்தகட்ட படப்பிடிப்பு முடிஞ்சதும் தொடங்க வேண்டியதுதான். எங்கள் டீம் தயார். படத்தின் தலைப்பு மாஸா முன்னறிவிப்போட வரும். ஜூலை வரைக்கும் பொறுங்க ப்ளீஸ்’ என ட்வீட் செய்திருந்தார். 






இதற்கிடையேதான் தற்போது ஜூலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என்கிற அறிவிப்பு வந்துள்ளது. 

 
Also Read: 50 சாம்பியன்ஷிப்..50 கைதுகள்! - இது மரண அடி ‛மைக் டைசன்’ வரலாறு!